“வாட்ஸ்அப் சேனல்” என்றொரு சேவை அறிமுகம்! என்ன பயன்? எப்படி பயன்படுத்துவது?

“வாட்ஸ்அப் சேனல்” என்றொரு சேவை அறிமுகம்! என்ன பயன்? எப்படி பயன்படுத்துவது?

ர்வதேச அளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் Channels என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் அம்சத்தைப் போலவே, மெட்டாவின் வாட்ஸ்அப் இப்போது பயனர்கள் Channel மூலம் அதிக குழுக்களுக்கு செய்திகளை அனுப்ப உதவுகிறது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் சேனல்ஸ் எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் போல இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அட்மின்கள் அல்லது தனிநபர்கள் போட்டோ, டெக்ஸ்ட், வீடியோ, ஸ்டிக்கர்ஸ், வாக்கெடுப்பு போன்றவற்றை நடத்த முடியும். இதில் அட்மின் மற்றும் ஃபாலோயர்களின் பிரைவசிக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு வாட்ஸ்அப் கணக்கை பின்தொடர்பவர்கள் சக ஃபாலோயர்கள் குறித்த விவரங்களை அறிய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் Channels வழக்கமான சேட்களில் இருந்து மாறுபட்டது. அது பின் தொடர்பவர்களின் அடையாளங்கள் மற்ற பின்தொடர்பவர்களுக்கு ரகசியமாக இருப்பதை உறுதிசெய்கிறது. மேலும் Channel என்பது ஒரு வழி ஒளிபரப்பு கருவியாக செயல்படுகின்றன. அட்மின், பின்தொடர்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் Channel, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளைப் பகிர உதவுகிறது.

வாட்ஸ் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாங்கள் இந்தியாவிலும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் Channels என்ற அம்சத்தை தொடங்குகிறோம் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வாட்ஸ்அப் Channels ‘ஒரு வழி’ ஒளிபரப்பு கருவியாகும், மேலும் வாட்ஸ்அப்பிற்குள்ளேயே உங்களுக்கு முக்கியமான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான தனிப்பட்ட வழியை வழங்குகிறது,” என்று தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் சேனல் எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் வாட்ஸ்அப்பை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும். அதாவது Google Play Store அல்லது App Store இலிருந்து உங்கள் WhatsApp செயலியை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யவும்.

2. இப்போது வாட்ஸ்அப் ஓபன் செய்து Updates tab பக்கம் சென்றால் முதலில் ஸ்டேட்டஸ் அம்சம் இருக்கும். அதன் கீழே சேனல் அம்சம் இருக்கும். அதில் நிறைய சேனல்கள் இருக்கும்.

3. உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களின் சேனல்களை ‘+’ பட்டனை கிளிக் செய்து ஃபாலோ செய்யலாம்.

4. இந்த சேனல் அம்சத்தில் நீங்கள் பிரபலங்களுடன் ஷேட் செய்ய முடியாது, போஸ்ட் ரியாக்சன் ( Reaction) அனுப்பலாம்.

error: Content is protected !!