இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சி வாய்ப்பு!

ந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) இந்தியாவின் முன்னணி பொது துறை வங்கிகளில் ஒன்றாகும். இது 1937ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது. IOB வங்கி சேமிப்பு கணக்குகள், கடன் வசதிகள், நிதி சேவைகள் மற்றும் இணைய வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளை வழங்குகிறது.பொதுத்துறை வங்கியாகி விட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 750 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 750 காலிப்பணியிடங்கள் தொழிற்பயிற்சிக்கு நிரப்பப்படுகிறது.
தமிழ்நாடு மட்டும் 175 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவை எஸ்சி – 33, எஸ்டி – 1, ஒபிசி – 47, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் -17, பொதுப் பிரிவினர் – 77 என நிரப்பப்படுகிறது. இதில் 7 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழிற்பயிற்சிக்கு 01.03.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 20 வயது நிறைந்திருக்க வேண்டும். மேலும் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

தொழிற்பயிற்சி உதவித்தொகை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மெட்ரோ நகரங்களுக்கு மாதம் ரூ.15,000, நகர புறங்களில் மாதம் ரூ.12,000 மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாதம் ரூ.10,000 அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் வழி தேர்வு மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மொழி தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள இடங்களுக்கு தமிழ் மொழி தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்
https://nats.education.gov.in மற்றும்
https://www.apprenticeshipindia.gov.in என்ற மத்திய அரசின் தொழிற்பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://bfsissc.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை https://www.iob.in/Careers என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.900 மற்றும் 18 ஜிஎஸ்டி-யுடன் இணைத்து ரூ.944 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.708 மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.472 செலுத்த வேண்டும்.

error: Content is protected !!