ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம் !

ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம் !

உலகம் முழுவதும் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. 1987ம் ஆண்டு உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது. இதை நினைவு படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதி சர்வதேச மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்ப டுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், அதை கட்டுப்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ. நா.வால் அறிவிக்கப்பட்டு  இத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் என்பது மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனை கட்டு படுத்தும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக கனமிறங்கி உள்ளன.அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, உடை, உறைவிட வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப தனி நபர்களின் வருமானம் மற்றும் சம்பாத்தியம் உயர வேண்டும். அப்போதுதான் சிக்கல் தவிர்க்கப்படும்.

படிப்பறிவு பெற்ற, பொருளாதார நிலையை நன்கு உணர்ந்த மனிதர்கள் மக்கள் தொகையைக் குறைப்பதன் அவசி யத்தை ஏற்றுக் கொண்டு குடும்பத்தை சுருக்கி வருகிறார்கள்.பாட்டன் (தாத்தாவுக்கு தாத்தா) காலத்தில் ஒவ்வோரு குடும்பத்திலும் குறைந்தது 10 பிள்ளைகள் கூட இருந்தனர். பெற்றோருக்கு குறைந்தது 4 முதல் 5 பிள்ளைகள் இருந்தனர். அது படிப்படியாக குறைந்து, ‘‘நாம் இருவர், நமக்கு இருவர்’’ என்றாகி, ‘‘நாம் இருவர், நமக்கு ஏன் இருவர்’’ என்று வந்து, ‘‘ஒரு குடும்பம் – ஒரு வாரிசு’’ என்பது போல் நிலைமை மாறி வருகிறது.

தற்போதைய நிலையில் உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நாடு சீனா. இச்சாதனையை இன்னும் ஏழு ஆண்டு களில் இந்தியா முறியடித்துவிடும் என ஐ.நா., தெரிவிக்கிறது. உலகின் மக்கள்தொகை தற்போது 760 கோடியாக உள்ளது. இதில் முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை 137 கோடி. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா வின் மக்கள்தொகை 2011 படி, 121 கோடி. இன்னும் ஏழு ஆண்டுகளில் (2024ம் ஆண்டு) சீனாவை முந்தி, இந்தியா முதலிடத்தை பெறும் என ஐ.நா., ஆய்வு தெரிவித்துள்ளது.

2050ல் உலக மக்கள்தொகையில் சரிபாதியாக 9 நாடுகளின் மக்கள்தொகை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவை இந்தியா, நைஜீரியா, காங்கோ, பாகிஸ்தான், எத்தியோப்பியா, தான்சானியா, அமெரிக்கா, உகாண்டா, இந்தோனேஷியா. மேலும் இந்த நாடுகள் தான், உலகின் மக்கள்தொகை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.

அதிலும் தற்போதைய மக்கள்தொகையை விட அடுத்த 13 ஆண்டுகளில் 100 கோடி அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு  உள்ளது.இதோ விபரம்

ஆண்டு மக்கள்தொகை
1990 530 கோடி
2017 760 கோடி
2030 860 கோடி
2050 980 கோடி
2100 1,120 கோடி

மேலும் ஐ.நா., சபை முந்தைய ஒரு அறிக்கையின் படி, உலகில் ஒரு நாளைக்கு 1000 பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என மதிப்பிட்டுள்ளது. இதற்கு சுகாதார வசதி குறைவும் ஒரு காரணம். உயிரிழப்பு இல்லாத பிரசவம் நடப்பதற்கு, உரிய சுகாதார வசதிகளை ஒவ்வொரு அரசும் ஏற்படுத்த வேண்டும்.மக்கள் தொகை அதிகரிப்பதால் நாட்டில் குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, சுகாதாரம், உணவு, கல்வி, போக்கு வரத்து, இடப்பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு குடும்பக்கட்டுப்பாடு கள் குறித்த விழிப்புணர்வை அரசு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மக்கள்தொகை பற்றிய கல்வி, பள்ளிகளில் இடம் பெற வேண்டும்.

error: Content is protected !!