June 4, 2023

இந்தியாவுக்குள் பாக். தீவிரவாதிகள் ஊடுருவலாம் ; உளவுத்துறை எச்சரிக்கை!

இன்னும் இரண்டு வாரங்களில் குடியரசு தினம் கொண்டாட ஆயத்தமாகும் சூழலில்  பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவிற்குள் ஊடுருவ சரியான நேரம் பார்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. துணையோடு  பயங்கரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இந்திய ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.