இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம்’ விருது – அதே ‘இந்தூர்’)

இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம்’ விருது – அதே ‘இந்தூர்’)

த்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து எட்டாவது முறையாக இந்தியாவின் ‘மிகவும் தூய்மையான நகரம்’ என்ற விருதைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

மத்திய அரசின் சுவச் சர்வேக்‌ஷன் (Swachh Survekshan) திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் இந்தத் தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டுக்கான தூய்மை விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுதில்லியில் நடந்த விழாவில் வழங்கினார்.

இந்தோர், குப்பை சேகரிப்பு, கழிவு மேலாண்மை, குடியிருப்பு மற்றும் சந்தைப் பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் பொதுக் கழிப்பறைகளின் தூய்மை ஆகியவற்றில் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளது. மேலும், குப்பைகளை மூலத்திலேயே பிரிப்பதில் 98% மதிப்பெண்களைப் பெற்று, பூஜ்ஜிய குப்பைக் கிடங்குகளைக் கொண்ட நகரமாகத் திகழ்கிறது.

இந்தூர் மட்டுமல்லாமல், சூரத் மற்றும் நவி மும்பை ஆகிய நகரங்களும் தூய்மைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்த ஆண்டு, ‘சூப்பர் சுவச் லீக்’ என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ஒருமுறையாவது முதல் மூன்று இடங்களைப் பிடித்த நகரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தச் சாதனை, இந்தூர் நகரின் மக்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் மற்றும் அர்ப்பணிப்பான முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும். மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக இந்தூர் தொடர்ந்து செயல்படும் என அதன் மேயர் தெரிவித்துள்ளார்.

Related Posts