32°C

நான் பூமியைச் சேர்ந்த பெண் – அசர வைத்த திருவண்ணாமலை சிறுமி!

admin Published: November 3, 2021 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

“நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள். இந்த புவி வெப்பமயமாதலை தடுக்க வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்” என பேசி உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றி சர்வதேச கவனம் பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுமி.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா உமாசங்கர். இவர் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர். சூரிய சக்தியில் இயங்குவதால் கரியின் பயன்பாடு குறைந்து சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்ற இவரது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. பிரிட்டன் இளவரசர் வில்லியம் அளிக்கும் எர்த்ஷாட் பரிசு போட்டிக்கும் இவர் தேர்வானார். இவருக்கு கிளாஸ்கோ காலநிலை மாற்ற மாநாட்டில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய வினிஷா உமாசங்கர், “நான் இந்தியாவில் இருந்து மட்டும் பேசவரவில்லை. பூமியில் இருந்து பேச வந்துள்ளேன்” என கூறி தன் உரையை தொங்கினார்.

தொடர்ந்து பேசுகையில், “எங்களுடன் சேர உங்களை அழைக்கும்போது, ​​நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியமானது.” என்று சொல்லி அசத்தினார்