June 7, 2023

இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், வேலையும்!

கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கப்பல் அகாடமியில் நான்காண்டு பி.டெக்., படிப்பும், அதன் பின் வேலையில் சேருவதற்கும் திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எஜிகேஜன் பிராஞ்ச் 5, எக்சிகியூட்டிவ் & டெக்னிக்கல் பிராஞ்ச் 29 என மொத்தம் 34 இடங்கள் உள்ளன.

வயது: 2.7.2001 முதல் 1.1.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீதம், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2020 ஜே.இ.இ., (மெயின்) தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஜே.இ.இ., (மெயின்) தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

கடைசிநாள்: 20.10.2020.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு!