ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை!

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவை ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 50 மைக்ரான்களுக்கும் குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்தத் தடை உத்தரவு அக்டோபர் 2ந்தேதி முதல் அமலுக்கு வரும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீங்குகளை பல ஆண்டுகளாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் அரசாங்க அறிக்கைகள் தெரிவித்துவருகின்றன. உலகளவில், உற்பத்தி செய்யப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளும் 75% கழிவுதான். இதில் 87% சுற்றுச்சூழலில் கசிந்து விடுகின்றன. ஆஸ்தி ரேலியா வின் நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வை இந்த ஆண்டு உலக வனவிலங்கு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக ஒருவர் ஒவ்வொரு வாரமும் 5 கிராம் பிளாஸ்டிக் உட்கொள்வதாக ஆய்வு முடிவு கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு இயற்கை வளங்களில் கலக்கின்றன. குறிப்பாக நீர் நிலைகளில். இதுதான் பிளாஸ்டிக் உட்கொள்ளளின் மிகப்பெரிய வழியாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. இதில் குழாய் நீரின் மாதிரியில் காணப்படும் பிளாஸ்டிக் இழைகளின் அடிப்படையில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மாதிரிகள் செய்யப்பட்ட குழாய் நீரில் 82.4 சதவீதத்தில் 500 மில்லிக்கு நான்கு பிளாஸ்டிக் இழைகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள சூழலில் 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மத்திய ரயில்வே துறை, இந்த தடை உத்தரவு அக்டோபர் 2 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவும், முதற்கட்டமாக 360 முக்கிய ரயில்நிலையங்களில் 1,853 பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் நசுக்கும் இயந்திரங்களை விரைவாக அமைக்கவும் அனைத்து மண்டல மேலாளர் களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்மை காலமாக பிளாஸ்டிக் குப்பைகளை உருவாக்கும் மையம் என இந்திய ரயில்வே கருதப்படுகிறது. இந்த அவப் பெயரை மாற்ற வேண்டும்.ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பொருள்களை விற்பனை செய்யும் அமைப்புகள் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரயில்வே தொழிலாளர்க பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும், பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி உட்படுத்தி மீண்டும் பயன்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க முடியுமானால் அவற்றை நிராகரிக்க வேண்டும் எனவும் ரயில்வே போர்டு தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

Related Posts

error: Content is protected !!