பார்லிமெண்ட் கேன்டீன்லேயே ஃபுட் ரேட் கூடிப் போச்சு!

பார்லிமெண்ட் கேன்டீன்லேயே ஃபுட் ரேட் கூடிப் போச்சு!

சர்வதேச அளவில் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் 15 வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்திய பாராளுமன்ற கேண்டீனில்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தரமான உணவுகள் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது. உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா என்பது சந்தேகம் தான்..அதாவது  25ரூபாய்க்கு சிப்ஸுடன் மீன் பிரை, 18 ரூபாய்க்கு மட்டன் கட்லெட்,  4 ரூபாய்க்கு அவித்த காய்கறிகள்,  33 ரூபாய்க்கு முழு அசைவ சாப்பாடு என சாப்பாடு பட்டியல் நீளுகிறது. அவித்த முட்டை முதல் பல்வேறு வகையான சிக்கன், மட்டன் உணவுகள் என மொத்தம் 76 வகையான உணவுகள் நாடாளுமன்ற கேன்டீனில் சமைத்து வழங் கப்படுகின்றன இது குறித்து சர்ச்சை வெடித்ததை அடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் உணவு பொருட்களின் விலை ஓரளவுக்கு அதிகரித்தது.

canteen oct 5

இந்த நிலையில்,  பார்லிமெண்ட்  கேன்டீன் உணவு பொருட்களின் விலை 50 முதல் 70 சதவீதம் உயர்த்தப்படுவதாக நாடாளுமன்ற உணவு கழகத்தின் நிர்வாகத் தலைவர் ஜிதேந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.இந்த விலை உயர்வு மூலம், பார்லிமெண்ட் கேன்டீனில் உணவு தயாரிக்க ‘லாபமும் இல்லை – நட்டமும் இல்லை’ என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம், ஒவ்வொரு உணவு பொருட்களுக்கும் ரூ.20 கூடுதலாகவும், காபி, டீக்கு ரூ.1 கூடுதலாகவும் செலவிட வேண்டியது வரும்.

மிகக் குறைந்த விலைக்கு இங்குள்ள கேன்டீனில் விற்கப்படும் உணவுகளை தயாரிக்கும் வடக்கு ரயில்வே கேட்டரின் சர்வீஸ் கழகத்துக்கு மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.60 கோடியே 70 லட்சம் அளவுக்கு மானியம் வழங்கியுள்ளது.ஒவ்வொரு எம்.பியும் ரூ.1.4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் லட்சங்களில் சம்பளம், இலவச விமான, ரயில் பயணம், இலவச தங்குமிடம், இலவச மின் சாரம், இலவச தொலைபேசி, பாராளுமன்றம் நடந்தால் தினசரி பேட்டா என பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் எம்.பி.க் களுக்கு சாப்பாடு வகையிலும் மக்களின் வரிப்பணம் பெருமளவில் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. அதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், நாடாளுமன்ற ஊழியர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் என தினமும் சராசரியாக  பார்லிமெண்ட் கேன்டீனில் 4,500 பேர் உணவருந்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts