ஆகாயத்திலும் ‘இந்தியன் 2` விளம்பரம்!

ஆகாயத்திலும் ‘இந்தியன் 2` விளம்பரம்!

வீன மயமாகி விட்ட இன்றைய காலகட்டத்தை ‘விளம்பர யுகம்’ எனலாம். இன்று விளம்பரப்படுத்தாத பொருட்களே இல்லை. விளம்பர யுக்திகளும் பெருகிவிட்டன. கி.மு 1500-களில் எகிப்தில் முக்கிய கடைகளின் வாசல்களில், என்னென்ன பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன என்று குறிப்பிட்டு போர்டுகள் வைத்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதுதான் உலகின் முதல் விளம்பரம். அதே சமயம் அவை அடுத்தடுத்த தளங்களில் பயணித்து ஹிட் அடித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்தியன் 2 படத்தின் போஸ்ட்ரை துபாயில் பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து பறக்க விட்டு வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதுடன் உலக அளவிலான சினிமா ரசிகர்களின் பேசு பொருளாகி உள்ளது.

உலக நாயகன்கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் டைரக்‌ஷனில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.முதல் பாகமான ‘இந்தியன்’ தமிழக பிரச்சனைகளை பேசிய நிலையில், ‘இந்தியன் 2’ தேசிய அளவிலான பல பிரச்சனைகள் பற்றி பேசியிருப்பதால் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிபப்டுத்தும் விதத்தில் அண்மையில் வெளியான படத்தின் டிரைலர் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. எஆனாலும் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சிறகு இல்லாத குறையாக இந்தியாவில் மட்டும் இன்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் பறந்துக்கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், எந்த பக்கம் திரும்பினாலும் ‘இந்தியன் 2’ மட்டுமே பளிச்சிடுகிறது.

எதிர்வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘இந்தியன் 2’ படத்தின் புரோமோஷன் பணிகளில் படு தீவிரமாக இறங்கியிருக்கும் லைகா & ரெட் ஜெயண்ட் நிறுவனம், இதுவரை யாரும் செய்திராத பல யுக்திகளை ககையாண்டு வருகிறது. அந்த வகையில், துபாயில் ஸ்கை டைவிங் மூலமாகவும் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டவிங் வீரர்கள் பறந்தபடியே தங்களுடன் ‘இந்தியன் 2’ விளம்பரத்தையும் பறக்கவிட்டு, பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்கள். பூமியில் மட்டும் அல்ல ஆகாயத்திலும் ‘இந்தியன் 2’ தான் என்ற லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் விளம்பர யுக்தி ரசிகர்களை வியக்க வைத்தது போல், படமும் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதத்தில் இருக்கும் என்பது தெரிகிறது.

error: Content is protected !!