32°C
விளம்பரம்
Advertisement

அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா – ரஷ்யா ஏவுகணை ஒப்பந்தம்!

admin சேலம் Published: October 5, 2018 2 நிமிட வாசிப்பு Updated: October 6, 2018 உலகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்து உள்ள நிலையில் அதனைப் புறக்கணித்த இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடியும்  கையெழுத்து இட்டார். ஆம்.. இந்தியா-ரஷ்யா இடையே எஸ்-400 ரக ஏவுகணைத் தாங்கி அமைப்பு கொள்முதல் ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் டெல்லியில் நடந்த இருநாடுகளின் உச்சி மாநாட்டில், கையெழுத்தானது.

எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை 400 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாய்ந்து, இடைமறித்து தாக்கி அழிக்கும் அதி நவீன எஸ்-400 ஏவுகணைத் தாங்கி அமைப்பை 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான இந்த ஒப்பந்தம், இந்திய பாதுகாப்புப் படையின் பலத்தை உலகுக்குப் பறைசாற்றுவதில் முக்கியப் பங்காற்றுவதாக அமைந்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து ராணுவக் கொள்முதலை கைவிட வேண்டும் என்றும், S-400 ரக ஏவுகணைத் தாங்கி அமைப்பை கொள்முதல் செய்யும் திட்டத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

அவ்வாறு கைவிடத் தவறினால், ரஷ்யாவுடன் ராணுவக் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது, பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் அமெரிக்காவின் சட்டத்தை அமலாக்கும் நிலையைத் தவிர்க்க முடியாது என்று நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா வெள்ளை மாளிகை மிரட்டல் விடுத்திருந்தது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மிரட்டலை மீறி, டெல்லியில் நடந்த இந்தியா-ரஷ்யா இடையேயான 19-வது உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் முக்கிய ராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்பது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்