இந்தியா எப்போதும் இப்படித்தான் -ரஷ்ய Vs உக்ரைன் விவகாரத்தில் நம் நாட்டின் போக்கு குறித்து அமெரிக்கா கருத்து

இந்தியா எப்போதும் இப்படித்தான் -ரஷ்ய Vs உக்ரைன் விவகாரத்தில் நம் நாட்டின் போக்கு குறித்து அமெரிக்கா கருத்து

ஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியில்லை என்றாலும் வியப்பளிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த மாதம் 24 ந்தேதி தொடங்கிய போர், ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் தொடர்கிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்றது. எனினும் இதுவரையில் இந்தியா, எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் 5 முறை வாக்கெடுப்பு நடத்தியும், இந்தியா யாருக்கும் சாதகமாக வாக்களிக்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்தது.

இந்த நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தோ-பசிபிக் இயக்குநரான மீரா ராப்-ஹூப்பர், “ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியானதாக இல்லையென்றாலும், அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை” என பேசியிருக்கிறார்.

வாஷிங்டனின் ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் இந்தியா நடத்திய ஆன்லைன் மன்றத்தில் பேசிய மீரா ராப்-ஹூப்பர், “உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதை இந்தியா தவிர்த்துள்ளது. ஐ.நா.வில் வாக்களிக்க வரும்போது, ​​தற்போதைய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை நாம் அனைவரும் நிச்சயமாக ஒப்புக்கொண்டு ஒப்புக்கொள்வோம்.

ஆனாலும் ரஷ்யாவுடனான அதன் வரலாற்று உறவைப் பொறுத்தவரையில் அது வியப்பளிக்கவில்லை. இந்தியா அண்மை ஆண்டுகளில் வாஷிங்டனுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக்கொண்டது. சீனாவுடனான உறவை பின்னுக்குத் தள்ளும் வகையில், குவாட் குழுவின் முக்கிய பகுதியாக இந்தியா உள்ளது. ஆனால் மாஸ்கோவுடன் இந்தியா நீண்டகால உறவைக் கொண்டுள்ளது. எங்கள் தொலைநோக்கு எல்லாம் இந்தியாவை நெருக்கமாக வைத்திருப்பதை உள்ளடக்கியதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

error: Content is protected !!