தமிழ் குரல் / AI Voice
நவம்பர் மாதத்தில் இருந்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டால், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா கூறுகிறது.
நவம்பர் மாதத்தில் ஈரானுடனான அனைத்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் அமெரிக்கா கேட்டுள்ளது. இந்தியாவுக்கு எந்தவித விதி விலக்கும் இல்லை என கூறி உள்ளது.
அமெரிக்கா உண்மையில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதா என இந்தியா வெளியுறவுத்துறை அதிகாரியிடம் கேட்கப்பட்டபோது ஆமாம் அமெரிக்கா கூறுவது உண்மைதான் என்றார்.
நவம்பர் 4 ம் தேதி ஈரானிய எண்ணெய் இறக்குமதியைநிறுத்த வேண்டும் என இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளிடமும் அமெரிக்கா கூறி உள்ளதா என கேட்கப்பட்டபோது சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகள் ஆம் என கூறினார்.
இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் மற்றும் பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களும் அதே பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தப்படும் என்றார் சீன அதிகாரி.
இந்தியா மற்றும் சீனா ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட இறக்குமதி செய்யக்கூடாது என பெயர் வெளியிடப்படாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியா பதில்
ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்கும் பொருளாதாரத் தடைகள் பற்ரி மட்டுமே இந்தியா கவனத்தில் கொள்வது வழக்கம். தனிப்பட்ட நாடுகள் விதிக்கும் தடைகள் பற்றி கவலைப்படுவதில்லை.
நாளொன்றுக்கு உலக நாடுகளுக்கு ஈரான் 25 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது.
உலக கச்சா எண்ணெய் சந்தையிலிருந்து சில மாதங்களில் நீக்கி விடலாம் என்று அமெரிக்கா நினைப்பது சாத்தியமற்ற வேலை. என்று ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

