மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை!- மத்திய அரசு இன்று அறிவிப்பு

மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை!- மத்திய அரசு இன்று அறிவிப்பு

நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகமாகவும் செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை/டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட சீனாவின் செயலிகளுக்கு ஏற்கனவே அரசு தடை விதித்து உள்ள நிலையில் இன்று மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69’ஏ இன் கீழ் 43 மொபைல் செயலிகளை இந்தியாவில் பயனர்கள் அணுகுவதைத் தடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட மொபைல் செயலிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

AliExpress, Alipay Cashier, WeTv, AliSuppliers App, Alibaba Workbench, Lalamove India, Drive With Lalamove India Snack Video Camcard, Camcard BCR Western, solu, Chinese Social, Date in Asia, We Date, Free Dating App, Adore App போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் Truly Chinese, Truly Asian, China Love, Date My Age, Asian Date, FlirtWish, Guys Only Dating, Tubit, We Work China, First Live Love, Rela, Cashier Wallet, Mango Tv, MGTV Hunan, WeTV, We TV version, WeTV Lite, Lucky Live, Taobao Live, Ding Talk, Identity V, Isoland 2, BoxStar, Heroes Evolved, Happy Fish, Jellipop Match, Munchkin Match, Conquista Onli ne II உள்ளிட்ட செயலிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து “இந்திய இணைய குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம், உள்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட விரிவான அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பயனர்களால் இந்த செயலிகளின் அணுகலைத் தடுப்பதற்கான உத்தரவை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது” என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!