வானியல் அதிசயம் ஒன்று வரும் 21 ஆம் தேதி நடைபெறப் போகுதுங்கோ!.

வானியல் அதிசயம் ஒன்று வரும் 21 ஆம் தேதி நடைபெறப் போகுதுங்கோ!.

நாம் வாழும் பூமியை போல் மேலும் பல உலகங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், பல கிரகங்களை பார்ப்பதற்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் அனைவரும் பார்க்க முடியாது. விஞ்ஞானிகளால் அடையாளம் காணப் பட்டுள்ள கிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக சுழன்று வருகிறது. சில சமயங்களில் சில கிரகங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும் வாய்ப்பும் விண்ணில் நடக்கிறது. இந்நிலையில் அத்தகைய வானியல் அதிசயம் ஒன்று வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆம்.. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21 ஆம் தேதி மிக அருகில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. இந்த கோள்கள் கடைசியாக கடந்த 1623 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொண்டன. சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அரிய நிகழ்வு விண்வெளி ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளாது.

டிசம்பர் 21 ஆம் தேதி இந்த இருகோள்களும் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் சந்தித்துக்கொள்ளவுள்ளன. இந்த அரிய நிகழ்வு சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் தென்படும் என பிர்லா கோளரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த இணைவுக்கு முன்னதான நாட்களில் இரு கிரங்கங்களும் நெருங்கி வருவதுபோல் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரகங்கள் இனி அடுத்தததாக 2080 ஆம் ஆண்டு அருகருகே சந்தித்துக்கொள்ளும் என வானியல் ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!