இடியட் – விமர்சனம்!

இடியட் – விமர்சனம்!

ம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடும் நேரமிது. காமெடி நடிகர்கள் எல்லாம் ஈகோ உள்ளிட்ட ஏதேதோ பிரச்சினை அல்லது காரணங்களால் ஹீரோ(!) ஆகி விடுவது வாடிக்கையாகிப் போனது. அதிலும் கூட்டத்தோடு வருபவர்கள் எல்லாம் சோலோ காமெடி பண்ணுவதையும் தாண்டி ஹீரோத்தனமாக ஆக்ட் கொடுக்கும் படங்கள் கோலிவுட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வரிசையில் சிவா என்பவர் தோன்றும் ஒரு படத்தின் டைட்டிலேயே தங்கள் தரத்தை வெளிக்காட்டி அசத்தி விட்டார்கள்.. அதுதான் ‘இடியட்’

கதை என்னவென்று கேட்டால் அதை  புரிய தனியாக நாம் கிளாஸ் படிக்க வேண்டும்அந்த அளவு இடியாப்பம் சுற்றுகிறார்கள்.  சமீபத்திய தமிழ் படங்களில் வெகு மோசமான படங்களின்  லிஸ்ட்டை அடைந்துள்ளது  இடியட்”

இந்த இடியட்  என்பது  படம்  பார்க்கும்  நம்மை  சொல்வது  போலவே  இருக்கிறதுகொஞ்சமும் சிரிப்பில்லாத திரைக்கதைநடிகர்களின்  படு  கேவலமான  ரியாக்சன்கள், அமெச்சூரான  மேக்கிங் என படத்தில் எதுவுமே  நன்றாக இல்லை.

சிவா இந்தப்படத்தில் பைத்தியமாக வருகிறார் நமக்கு படம் பாதியிலேயே அந்த நிலை வந்து விடுகிறதுநிக்கிகல்ராணி  டாக்டர்ஆனந்தராஜ்ஊர்வசி  இன்னும்  ஒரு கூட்டம்  என  ஆளாளுக்கு என்னவோ  செய்து  கொண்டு சுற்றுகிறார்கள்  இத்தனை  கூட்டமிருந்தும்  மருந்துக் கூட  சிரிப்பு  வரவில்லை.

ஏனோதானோவென எழுதப்பட்டு அதே வேகத்தில் படமாக்கப்பட்டது போல் இருக்கிறது படம். எடுத்த படத்தை போட்டு பார்க்காதாலோ என்னவோ காமெடியும் இல்லை  ஹாரரும்  இல்லைபடம்  எங்கே  ஆரம்பிக்கிறது  எங்கு  செல்கிறது என்பது எதுவும்  புரியவில்லை.

ஒளிப்பதிவு ,மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி உள்ளதுமற்றபடி இடியட் என்போர் இப்படத்தை பார்க்கப் போகிறவர்கள் தான்..

மார்க் 1.5/ 5

error: Content is protected !!