32°C
விளம்பரம்
Advertisement

இனி ஒரு போதும் Air Indiaவில் பயணிக்க மாட்டேன்!

admin சேலம் Published: June 13, 2025 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



கடந்த செப்டம்பரில் டெல்லியிலிருந்து லண்டன் செல்வதற்காக Air India விமானத்தில் பயணித்தோம்.. அப்போதே முடிவு செய்து விட்டோம் இனி ஒரு போதும் Air Indiaவில் பயணிக்க கூடாது என.. அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அப்படி..என்றாவது அதையெல்லாம் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.. இன்று அகமதாபத் விபத்தையொட்டி அந்த கசப்பெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது.. முதல் சர்வதேச பயணம் என்பதால் கொஞ்சம் excited ஆக இருந்தேன்.. அதுவும் விசா கடைசி நேரத்தில் வந்திருந்தால் கொஞ்சம் திரில்லிங்காகவும் இருந்தது..

சென்னை to டெல்லி சென்று அங்கிருந்து லண்டனுக்கு Connecting Flight. நள்ளிரவு ஒரு மணிக்கு டெல்லி சென்றுவிட்டோம்.. பேக் செக் இன், செக்யூரிட்டி செக், இமிக்ரேஷன் ப்ராசஸ், உள்ளே சென்று குட்டி தூக்கம் என எல்லாம் முடிந்து விமானத்திலும் ஏறி அமர்ந்து விட்டோம்.. சுற்றி சின்னஞ்சிறு குழந்தைகள், வயதானவர்கள், மத்திய வயதினர் என எல்லாரும் இருந்தனர்.. அதிகாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டிருக்க வேண்டும்..~குறிப்பிட்ட நேரம் கடந்தும் விமானம் புறப்படவில்லை.. சுமார் 2 மணி நேரம் விமானத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தோம்.. கடைசியில் ஆளுக்கு ஒரு குட்டே பிஸ்கட் கொடுத்துவிட்டு, தொழில்நுட்ப கோளாறு விமானம் புறப்பட தாமதமாகும், அதுவரை கீழிறங்கி காத்திருங்கள் என்றார்கள்..!

இரவு சரியான உறக்கமில்லை.. வேறுவழியின்றி கீழிறங்கி வந்தால் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க சொன்னார்கள்.. அதாவது மீண்டும் உம்மென்று இருக்கும் டெல்லி அதிகாரிகளிடையே ஷூவை கழற்றி, பெல்ட்டை கழற்றி செக்யூரிட்டி செக் என கடுப்பு பிடித்த வேலைகளை செய்ய சொன்னார்கள்..பைகளோடு ஒன்றிரண்டு கிலோமீட்டர் நடை கடந்து விமானத்தில் ஏறும் வரை மீண்டும் காத்திருப்பு.. நாங்களாவது பரவாயில்லை, குழந்தைகளையும் அவர்களோடு தன்னந்தனியாய் வந்திருந்தவர்களுக்கும் இன்னும் பாவம்..

காலை 5 மணிக்கு கிளம்பவேண்டிய விமானம் 10 மணிக்கு புறப்பட்டது.. 5 மணி நேர வித்தியாசத்தில் லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கு போய்ச்சேர வேண்டிய நாங்கள், மாலை 7 மணிக்குதான் போய் சேர்ந்தோம்.. இத்தனைக்கும் மதியம் லண்டனில் ஒரு திட்டமும் இருந்தது. அதுவும் collapse..!அது கூட பரவாயில்லை.. இனிதான் ஹைலைட்டே.. இறங்கி, லக்கேஜுக்கான கன்வேயர் பெல்ட்டில் சுற்றி சுற்றி கண்ணோட்டமிட்டும் என்னுடைய லக்கேஜ் வந்து சேரவில்லை.. இறுதியில் விசாரித்தபோது ஏர் இந்தியா, டெல்லியிலேயே எனது உள்பட உடன் பயணித்த மூவரின் பைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறது.. இதுதான் கடைசி விமானம் அடுத்த விமானத்தில் அனுப்புவார்கள், வந்து சேர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்றார்கள்.. புகார் எழுதி கொடுங்கள் என்றார்கள்.. மேலே இடிவிழுந்ததுபோல் இருந்தது.. என் Hand Luggage தவிர கையில் வேறெதுவும் இல்லை.. உடைகள் உள்பட அனைத்துமே இருக்கும் லக்கேஜ் பாவம் டெல்லியில் யாருமில்லாமல் காத்திருக்கிறது. அவர்கள் சொன்ன காரணம் தான் இன்னும் பெரிய ஹைலைட்.. 3 பேரின் லக்கேஜ்களை ஏற்ற நேரம் போதவில்லையாம்.. இத்தனைக்கும் எங்கள் விமானம் 5 மணி நேரம் தாமதமாகத்தான் புறப்பட்டது. என்னதான் செய்வார்கள் தெரியவில்லை..

சரி என ரியாலிட்டியை ஏற்றுக் கொண்டு இவையெல்லாம் உற்சாகத்தை கெடுத்துவிடக்கூடாது என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன்.. தனது லக்கேஜ் வந்து சேர்ந்தாலும் மனைவிக்கு இல்லையே என இல்யாஸின் முகம்தான் வாடியிருந்தது. 7.30க்கு ஹீத்ரோ விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு, லண்டன் மாநகரை அடைந்தோம். St Pancras ரயில் நிலையம் வந்து வெளியே வந்தபோது மாலையின் பேரழகும் அந்த புதிய காற்றும் உள்ளே சென்று என்னவோ செய்தது.. முழுக்க நிறைந்திருந்த பயண களைப்பும், ஏர் இந்தியா சொதப்பலும் காணாமல் போனது.. நாங்கள் சென்றிருந்த நேரம் லண்டனின் வெயில் காலம்.. 13 டிகிரி வெயிலில் சூரிய அஸ்தமனம் இரவு 8 மணிக்கு பிறகுதான்..!

Airbnb அறைக்கு சென்று கைவசமிருக்கும் லக்கேஜ்களை அங்கு வைத்துவிட்டு பிரபலமான சோஹோ பகுதிக்கு சென்றோம். அதற்குள் இருட்டியிருந்தது.. அங்கு 3 நாட்களுக்கு தேவையான உடை என எல்லாவற்றையும் வாங்கினோம்.. தண்டச்செலவு.. பிறகு பொறுமையாய் தேடிப்பார்த்தால் நிர்மலா சீதாராமன் லக்கேஜ்களை எல்லாம் விட்டுவிட்டு வந்த பெருமை ஏர் இந்தியாவிற்கு இருந்திருக்கிறது. 2 நாட்கள் கழித்து நாங்கள் தங்கியிருந்த அறைக்கே டெலிவரி செய்தார்கள்.. டெலிவரி நேரம் சரியாக சொல்லாததால் அன்றைய தினமும் திட்டங்களை கேன்சல் செய்துவிட்டு அறைக்கு பக்கத்திலேயே ஒரு பகுதிக்கு சென்று கூப்பிடு தொலைவில் டெலிவரிக்கு காத்திருந்து வாங்கினோம்.. இப்படி ஏர் இந்தியாவை நம்பி போனதால் ஏகப்பட்ட திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கிறது.. கடைசி நேர விசா, புக்கிங்.. புறப்பாடு நேரம் என பல காரணங்களால்தான் ஏர் இந்தியாவை தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருந்தது..

திரும்பி வரும்போதும் அப்படித்தான் பழைய ஏதோ ஏர் இந்தியா விமானம்.. டிவி டிஸ்ப்ளே உள்பட எதுவும் பலருக்கும் வேலை செய்யவில்லை.. நல்ல வேளை இரவு நேரமென்பதால் கொஞ்சம் உறங்கி நேரத்தைக் கடத்தினோம்.. உணவும் மோசம்.. இப்படி இரு அனுபவத்தை ஏர் இந்தியாவால் பெற்றோம்.. அதன் பிறகுதான் செய்திகளில் கவனிக்கத் தொடங்கினேன்.. தாமதம், பயணிகள் வாக்குவாதம் என எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் அது Air India வாக இருக்கிறது.. அதுவே இனிமேல் ஒருபோதும் அந்நிறுவனத்தை தேர்ந்தெடுக்க மறுக்கிறது..

இன்றைய அஹமதாபாத் விபத்திலும் ஏர் இந்தியா.. விசாரணைக்கு பிறகுதான் காரணங்கள் தெரியவரும்.. எவ்வளவு காலம் ஆகும் என தெரியாது.. இந்தக் கொடூரம் நேர்ந்திருக்கக் கூடாது.. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகள்.. 3 நிமிடங்களில் என்னென்னவோ நடந்துவிடுகிறது வாழ்வில்!

ஷெலினா ஹஸ்மா

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்