32°C
விளம்பரம்
Advertisement

இளம் வயதிலேயே மலடாகிப் போகும் இளம் பெண்கள்!-

admin Published: October 1, 2016 3 நிமிட வாசிப்பு இது லேடீஸ் ஏரியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ஒரு பெண்ணின் கருப்பையில் மாதாமாதம் கருமுட்டை வளர்ந்து, முதிர்ந்து, கரு உருவாவதற்காகக் காத்திருக்கிறது. பிறகு இது செயலிழப்பதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். இந்த சுழற்சி சராசரியாக 12-14 வயதில் தொடங்கும். ஆனால், இதன் முடிவு என்பது வயது சம்பந்தப்பட்டதல்ல… எண்ணிக்கை சம்பந்தப்பட்டது. ஒரு பெண்ணின் சினைப்பைகள் கருமுட்டையை வெளிவிடும் வரை இந்த சுழற்சி நடக்கும். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தனை கருமுட்டைகள்தான் உருவாகும் என்பதை பிறக்கும்போதே இயற்கை முடிவு செய்து விடுகிறது. சொல்லப் போனால் தாயின் கருவுக்குள் ஒரு பெண் குழந்தை இருக்கும்போதே, தன் கருவில் அது லட்சக்கணக்கில் கரு முட்டைகளைச் சுமக்கிறது.

woman oct 1

பிறந்தது முதல் குழந்தை வளர வளர, இந்தக் கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். பூப்பெய்தும்போது சுமார் இரண்டு லட்சமாக இருக்கும். மாதம் ஒரு கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்து மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் மிச்சமுள்ள கருமுட்டைகள் அழிந்துகொண்டேதான் இருக்கும். இது இயற்கையானது. அப்படி பெண்ணின் சினைப்பை ஒரு கட்டத்தில் காலியாகி, இனி கருமுட்டை ஸ்டாக் இல்லை என்று கையை விரித்து விடுவதையே நாம் மெனோபாஸ் நிலை என்கிறோம்.

இப்படி இயற்கையாக ஒரு பெண் வளரும்போது நிகழும் கருமுட்டை அழிவு, இன்று கொஞ்சம் நார்மலைத் தாண்டி விபரீதமான அளவுக்கு அதிகம் நிகழ்ந்து விடுகிறது. ஆம். சமீப காலமாக இளவயது பெண்கள் மத்தியில் கருமுட்டை வளர்ச்சி பாதிப்பு அதிகரித்து வருவதாக கருத்தரித்தல் மைய ஆலோசனை டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம், “வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம், வேலைப் பளு உள்ளிட்ட காரணங்களால் சமீப காலமாக திருமணமான இளவயது பெண்கள் கருத்தரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகமான உடல் எடை கொண்ட பெண்களே பெரும்பாலானோர். குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் 30 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கைக்கு மாறான ஹார்மோன் காரணமாகவும் கருமுட்டை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், கருமுட்டையில் நீர்க் கட்டிகள் உருவாகிறது.இதில், உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவற்றின் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். மேலும், கட்டுப்பாடு இல்லாத ஹார்மோனை சமன் செய்து மாதவிடாய் சுழற்சியை சரி செய்து சிகிச்சை அளிக்க முடியும். இதுதவிர லாப்பிராஸ்கோப்பி மூலம் கருமுட்டையைத் தூண்டி கருத்தரிக்க முடியும்” என்று தெரிவித்தனர்.

அதே சமயம் குழந்தையின்மைக்காக எடுத்துக் கொள்ளப்படும் சிகிச்சைகளில் ஒன்று கூட இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாக அமைந்து விடுவதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் ‘‘ ‘ஓவேரியன் டிரில்லிங்’ என்பார்கள் அதை. அதாவது, கருப்பையில் தங்கிவிடும் தேவையில்லாத விஷயங்களை லேப்ராஸ்கோப் மூலமாக உறிஞ்சி எடுப்பது. பொதுவாக, பாலிசிஸ்டிக் ஓவரி போன்ற கருப்பை பிரச்னை இருக்கும் பெண்களுக்கே இந்த சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் இப்போதெல்லாம், குழந்தை இல்லை என்றாலே பெண்ணுக்குத்தான் பிரச்னை இருக்கும் என சில டாக்டர்கள் முன்முடிவு செய்துவிடுகிறார்கள். உடனடியாக பெண்ணுக்கு இந்த சிகிச்சையை செய்து பார்த்து விடுவது வழக்கமாகிவிட்டது. மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கும் ஆரோக்கியமான பெண்களுக்கே இந்த சிகிச்சையை செய்து, சினைப்பையில் இருக்கும் பல்லாயிரம் கருமுட்டைகளை அழித்துவிடுகிறார்கள். இந்த ஆபத்தான பழக்கத்தைக் கைவிட வேண்டும்” என்கிறார்கள்

உடனடி செய்திகள்