கேன்சரால் பாதிக்கப்பட்ட மகனை ஆறுதல் கூறி ‘அனுப்பி’ வைத்த அன்னை!

கேன்சரால் பாதிக்கப்பட்ட மகனை ஆறுதல் கூறி ‘அனுப்பி’ வைத்த அன்னை!

மகனே, நீ சொர்க்கத்திற்கு போ…” என்கிறாள் தாய். “அம்மா நீ அங்கு வருவாயல்லவா.”. என்கிறான் மகன். “நிச்சயமாக வருவேன்..” தாய் பதில் சொல்லிய மறுதினம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 4 வயது மகன் இறந்து போனான். அந்தக் கடைசித் தருணங்களில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையே நடந்த மரண அவஸ்தை உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெகுவாக மக்களிடையே வெகுவாக பரவி வேதனைக் கொட்டித் தீர்த்திருக்கிறது.

us apr 13

இந்த உரையாடலை சம்பந்தப்பட்ட தாய், தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார். இதைப் படித்த பலர் துயரம் தாளாத நிலையில் தங்களின் கவலையையும் கண்ணீரையும் பதிவு செய்திருக்கின்றனர்.

கடுமையான புற்றுநோய் காரணமாக உயிரிழந்த தன் மகனுடன், தான் பேசிய உருக்கமான கடைசி நிமிடங்களைச் அந்தத் தாய் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்திலுள்ள லியோனார்ட் என்ற ஊரைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவனான நோலன் ஸ்கூலி ஒருவகை புற்றுநோயின் பாதிப்புக்குள்ளான். கடந்த ஆண்டில் அவனது புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டது. அடிக்கடி வாந்தியெடுத்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு பெற்றோர்களால் கொண்டு செல்லப்பட்ட நோலன் ஸ்கூலிக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

சில வாரங்களுக்குப் பின்னர் சிறுவனுக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் மருத்துவர்கள் கைவிட்டு விட்டனர். புற்றுநோய் முற்றி சிறுவன் நோலன் கடுமையான வலிக்கும் வேதனைக்கும் உள்ளாகி வந்தான்.

அவனுடைய தாயார் ரூத் ஸ்கூலி அவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிவந்தார். அவனுக்கு வலியும் அதிகரித்தது. மரண ஆபத்தும் நெருங்கிவிட்டது. ஒருநாள் சிறுவன் நோலன் இறந்து விட்டான். இப்போது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

தன்னுடைய மகனுடனான அந்தக் கடைசித் தருணங்கள் குறித்து தாயார் ரூத் ஸ்கூலி, தனது முகநூலில் இப்போது பதிவு செய்துள்ளார். எண்ணற்ற வாசகர்களைக் கலங்க வைத்த தாய்- மகனுக்கு இடையேயான அந்தக் கடைசி நேர உரையாடல் இதோ:

தாய்: உனக்கு உடலில் அதிக வலி இருக்குதா?

நோலன்: ஆமாம் அம்மா..

தாய்: புற்றுநோய் வந்தால் அப்படித் தான் வலிக்கும்… இனியும் நீ நோயுடன் போராட வேண்டாம்…!

நோலன்: அப்படியா..? நான் உனக்காக போராடுகிறேன், அம்மா…

தாய்: அம்மாவுக்காகத்தான் வலியைத் தாங்கிக்கொள்கிறாயா மகனே?

நோலன்: ஆம் அம்மா.. உங்களுக்காகத்தான்..

தாய்: சரி, அம்மாவின் கடமை என்ன தெரியுமா..?

நோலன்: என்னைப் பத்திரமாக பார்த்து கொள்வதுதான்….

தாய்: இங்கு உன்னை என்னால் இனியும் பார்த்துக் கொள்ள முடியாது. உன்னை பாதுகாப்பாக சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்… 

நோலன்: சரி அம்மா, நீங்கள் சொர்க்கத்துக்கு வரும்வரை, நான் அங்கேயே விளையாடி கொண்டிருக்கிறேன் அம்மா….

நோலன்: நீங்கள் நீச்சயம் சொர்க்கத்துக்கு வருவீர்கள் தானே..?

நோலன்: கண்டிப்பாக வருவேன் மகனே…, அம்மாவை விட்டு நீ ஒருபோதும் பிரிய முடியாது..

நோலன்: நன்றி அம்மா.. நான் அங்கேயே விளையாடிக் கொண்டிருப்பேன்…

இந்த உரையாடல் நடந்த மறுநாள் நோலன் இயற்கை எய்தினான். இந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெகுவேகமாகப் பரவி வெகு பலரை அழவைத்துக் கொண்டிருக்கிறது..!

error: Content is protected !!