கவர்னர் விருதுகள் 2025: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு!

தமிழ்நாடு கவர்னர் மாளிகையால் 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக நலனை மேம்படுத்துவதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பேணுவதிலும் சிறப்பான பங்காற்றிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகளுக்கு சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஆகஸ்ட் 14, மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தகவல்கள்:
- பிரிவுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
- வெற்றியாளர்கள்: ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- பரிசுத் தொகை:
- தொண்டு நிறுவனங்களுக்கு: ₹5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் விருது.
- தனிநபர்களுக்கு: ₹2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் விருது.
- வழங்குபவர்: தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி, குடியரசு தினத்தன்று விருதுகளை வழங்குவார்.
- விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு கவர்னர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) பதிவிறக்கம் செய்யலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மென் நகலை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
- துணை ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தின் அசல் பிரதியை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை:
தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். உங்கள் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இது!
தமிழ் செல்வி
.