கூகுள் வெதர் அதிரடி மாற்றம்: இனி ‘சர்ச்’ மூலமே வானிலை தகவல்!

கூகுள் வெதர் அதிரடி மாற்றம்: இனி ‘சர்ச்’ மூலமே வானிலை தகவல்!

ண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் தங்கள் ஹோம் ஸ்கிரீனில் ஒரு சூரியன் மற்றும் மேகமூட்டம் போன்ற ஐகானை வைத்திருப்பார்கள். அதைத் தட்டினால் ‘தவளை’ (Froggy) பொம்மையுடன் கூடிய அழகான வானிலை பக்கம் திறக்கும். இனி அந்தப் பக்கம் விடைபெறுகிறது. கூகுள் நிறுவனம் அந்தத் தனிப்பக்கத்தை நீக்கிவிட்டு, நேரடியாக கூகுள் சர்ச் முடிவுகளுக்குள் வானிலை தகவல்களைக் கொண்டு வந்துள்ளது.

என்ன மாற்றம்? ஏன் இந்த முடிவு?

இதுவரை நாம் பயன்படுத்தி வந்தது ஒரு தனிப் செயலி (App) கிடையாது; அது கூகுள் தேடல் செயலியின் ஒரு நீட்டிப்பு (Extension) மட்டுமே. தற்போது கூகுள் நிறுவனம் ஒரே தகவலை இரண்டு வெவ்வேறு இடங்களில் பராமரிப்பதைத் தவிர்க்க இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.

  • நேரடி சர்ச் ரிசல்ட்: இனி நீங்கள் வானிலை ஐகானைத் தொட்டாலோ அல்லது ‘Weather’ என்று தேடினாலோ, கூகுள் தேடல் பக்கத்திலேயே வானிலை விவரங்கள் தோன்றும்.

  • ஏஐ (AI) விளக்கம்: புதிய தேடல் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (AI Overview) மூலம் அன்றைய வானிலை குறித்த ஒரு சிறிய விளக்கமும் இடம்பெறுகிறது.

  • தவளை பொம்மை இருக்குமா? ஆம், பயனர்களுக்குப் பிடித்தமான அந்த ‘Froggy’ தவளை பொம்மை இன்னும் நீக்கப்படவில்லை; தேடல் முடிவுகளுக்குள் ஒரு சிறிய பெட்டிக்குள் அது இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிக்சல் (Pixel) பயனர்களுக்கு கவலை வேண்டாம்

கூகுளின் சொந்த தயாரிப்பான பிக்சல் போன்களில் ஏற்கனவே ‘Pixel Weather’ என்ற தனி செயலி உள்ளது. இந்த மாற்றம் பிக்சல் போன்களைப் பாதிக்காது. சாம்சங் மற்றும் பிற ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த ‘சர்ச் ரிசல்ட்’ மாற்றம் அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர் வரவேற்பு எப்படி?

முன்பு இருந்த ‘Full Screen’ வானிலை பக்கம் மிகவும் எளிமையாகவும், விளம்பரங்கள் இல்லாமலும் இருந்தது. தற்போது சர்ச் பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், கீழே ஸ்க்ரோல் செய்யும்போது தேவையற்ற இணையதள முடிவுகளும் (Web results) வருவதால் சில பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும், இது வேகமான அப்டேட்டுகளை வழங்க உதவும் என கூகுள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஈஸ்வர் பிரசாத்

Related Posts

error: Content is protected !!