கோஸ்ட் ஃபோன் வேணுமா?
ஹலோ நான் பேய் பேசுறேன் மாதிரி ஏதாவது விஷயமானு கேட்டா இல்லைன்னு சொல்லுவேன். கோஸ்ட் ஃபோன் என்றால் வேற அதாவது மொபைல் ஃபோன் இல்லாத மனிதனே இல்லைங்கிற நிலைமையில பொது இடத்தில் ஃபோன் யூஸ் பண்ணும் போதோ ஃபோனை எங்கேயாவது வச்சிட்டு போயிருக்கும் போதோ பிரச்சினை ஃபோன் ஸ்க்ரீன்ல வரும் அத்தனை விஷயங்களும் அத்தனை பேருக்கும் ஈஸியா தெரியும்.

அதுவும் பஸ் அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்னும் கஸ்டம் நம்மை ஃபோனை கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் வச்ச கண்ணு எடுக்காம பாக்கிற ஆட்களை தவிர்க்க முக்கியமாக ஒரு புது கண்டுபிடிப்பு தான் இந்த கோஸ்ட் ஃபோன். இதை துருக்கி நாட்டில் உள்ள செலால் கோகர் என்னும் மொபைல் ஃபோனை விற்கும் மேலாளர் கண்டுப்டித்திருக்கிறார்.
இந்த் கோஸ்ட் ஃபோனில் ஸ்க்ரீன் வெள்ளையா இருக்கும் இந்த ஃபோனை நீங்கள் இயக்க ஒரு சிறப்பு கண்ணாடி தருவாங்க அதை அணிந்து பார்த்தால் தான் ஃபோனில் என்ன மெசேஜ் வந்திருக்கு யார் ஃபோன் பன்றான்னு பார்க்க முடியும். இந்த கண்ணாடி இல்லையென்றால் இந்த ஃபோன் வெறும் சோப்பு டப்பா தான்.
மனைவிக்கு மிதமா பயப்படுறவங்க தைரியமா ஃபொனை ஆன்ல வச்சி சார்ஜ் போட்டுகிட்டு போகலாம் இனிமெ ஆனா கண்ணாடியை ஒளிச்சு வச்ச பிறகு…
Ghost phone’ will keep your screen hidden from prying eyes – You need a glass to see and operate your phone……


