டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்… தமிழக அரசு அறிவிப்பு!

மிழ்நாட்டில் வருடா வருடம் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து, போட்டி தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் மூலமாக கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 பேருக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாணவர்கள், இணையம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும். 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்குமிட வசதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in என இணையம் வாயிலாக நாளை ஜனவரி 29ம் தேதி முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். வரும் விண்ணப்பங்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்ப்படுவார்கள் என்றும், தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

சென்னையில் உள்ள கிண்டி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு ஆகும்.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள். கூடுதல் விவரங்களுக்கு, [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

error: Content is protected !!