15 வயதுக்கு குறைவான குழந்தையுடன் உடலுறவு கொண்டாலே பாலியல் வன்முறை!- பிரான்ஸ் புதிய சட்டம்

15 வயதுக்கு குறைவான குழந்தையுடன் உடலுறவு கொண்டாலே பாலியல் வன்முறை!- பிரான்ஸ் புதிய சட்டம்

ஒவ்வொரு நாட்டுக்கு ஒரு சட்டம் – அது என்னவாக இருந்தாலும், பரஸ்பர சம்மதத்துடன் இளைஞர்கள் உடலுறவில் ஈடுபடுவது 15 வயதிலிருந்தே பரவலாக நடைபெறுகிறது என்பது தான் நிஜம். சிறுமிகள் பூப்பெய்தும் வயது சராசரியாக11 என்றாகி விட்ட நிலையிலும் மீடியா, சினிமா ஆகியவற்றின் காமம் சார்ந்த தாக்கம் இளம் மனங்கள் மீது மிகக் கடுமையாக உள்ள நிலையிலும், உடலுறவுக்கான வேட்கையும் வாய்ப்பும் சாத்தியமும் 13, 14 வயதிலேயே தொடங்கிவிடுகின்றன. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள ‘sexual act on a minor’ சட்டத்தின்படி 15 வயதிற்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளிடம் யாராவது உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்முறையாகும் மற்றும் இந்த செயலில் ஈடுபடும் நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். அதேபோல் 18 வயதிற்குள் உள்ளவரின் விருப்பம் இல்லாமல் ஈடுபடும் உடலுறவும் பாலியல் வன்முறையாக இச்சட்டம் கருதுகிறது.பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 2018-ம் ஆண்டு பாலியல் வன்முறை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெண்களின் தவறாக நடந்துகொள்ளும் நபர்களிடம் உடனடி அபராதம் விதிக்கும் நடைமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றத்திற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட, புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே பிரான்சில் 15 வயது நிறைவடைந்தவர்கள் வயது வந்தவர்கள் எனவும், அதற்கு கீழ் உள்ளவர்கள் வயதுக்கு வராதவர்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் உடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் வல்லுறவு மற்றும் கற்பழிப்பு என கருதப்படும்.

மேலும்15 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் உடலுறவு கொள்வது தான் பாலியல் பலாத்காரம் அல்ல, அத்து மீறுவதும் தவறானது தான் என தற்பொழுது கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள நீதியமைச்சர் எரிக் டுபோண்ட் மோரெட்டி அவர்கள், தேசிய சட்டமன்றத்தில் இது எங்கள் குழந்தைகளுக்கும் நமது சமூகத்திற்குமான வரலாற்று சட்டம் என தெரிவித்துள்ளார். வீதிகளில் கூட சிறுவர்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதால் தான் பிரான்சில் இது போன்ற கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!