பாலிங் டவுண் சேலஞ்ச் – உலகம் முழுக்க பரவும் புது ட்ரெண்டிங்!

பாலிங் டவுண் சேலஞ்ச் – உலகம் முழுக்க பரவும் புது ட்ரெண்டிங்!

நம்ம கிறுக்குப் பய உலகத்துலே அப்பப்போ ஒரு ட்ரெண்ட் உருவாகி சர்வதேசம் முழுக்க பரவுவது வாடிக்கை. அந்த வகையில்  ஐஸ் பக்கெட், நீலத் திமிங்கலம், மோமோ, கிகி, பிட்னஸ் சேலஞ்ச் என ஏதாவது ஒரு சவால் இணையதளத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது “பாலிங் டவுண்’ (கீழே விழுதல்) என்ற சவால் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

கடந்த ஆகஸ்டில் ரஷ்யாவில் ‘பாலிங் டவுண் சேலஞ்ச்’ அறிமுகமானது. அதாவது பணக்காரர்கள் தங்களின் செல்வ செழிப்பை காட்டும் வகையில் சொந்த விமானத்தின் படிக்கட்டு, சொகுசு காரின் கதவு, சொகுசு படகின் படிக்கட்டு, தனியார் டென்னிஸ் மைதானத்தில் தலைகுப்புற விழுந்து கிடப்பதுபோல புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இதை சவாலாக ஏற்று ஏராளமான பணக்காரர்கள் வெவ்வேறு இடங்களில் தரையில் விழுந்து கிடப்பது போன்று விதவிதமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களை நிறைத்தனர்.

இந்த சவால் ஆசியாவில் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்படுகிறது. சிலர் நாய், பூனைகளை தலைகுப்புற படுக்கச் செய்து வலைதளங்களில் படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சீனாவின் ஷாங்காய் நகரில் அண்மையில் 2 பெண்கள், ‘பாலிங் டவுண்’ சவாலுக்காக நடைபாதையில் தலைகுப்புற படுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் இரு பெண்களையும் பிடித்து அபராதம் விதித்தனர். அதே நகரில் சாலையில் காரை நிறுத்தி தரையில் விழுந்து கிடப்பதுபோல புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தம்பதிக்கும் போலீஸார் அபராதம் விதித்தனர்.

Related Posts

error: Content is protected !!