32°C

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி

admin Published: April 22, 2020 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கை யாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்கி இருக்கிறது.பங்குகள் பெறப்பட்டதால் வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் மெசேஞ்ஞர் சேவை மூலம் ரிலையன்ஸ் தனது வணிகத்தை மேம்படுத்தும் எனவும் தெரிகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். சமீப ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போன நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கு லாபம் என வணிக வல்லூநர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த டீலிங்கால் முகேஷ் அம்பானிக்குத்தான் அதிக லாபம் இருப்பதாக தெரிகிறது. சமீப ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், இந்தப் பங்கு விற்பனை மூலம் கிடைத்துள்ள பணம் கடனை கழிக்க பேருதவியாக இருக்கும். வரும் 2021 மார்ச் மாதத்துக்குள், அதாவது நடப்பு நிதி யாண்டின் இறுதிக்குள், கடன் ஏதும் இல்லாத நிறுவனமாக மாற வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இலக்கு வைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட ஃபேஸ்புக் தற்போது உதவியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜியோ தொடங்கப்பட்ட சமயத்திலிருந்து தற்போது வரை 370 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது அந்நிறுவனம். பங்குகள் பெறப்பட்டதால் வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் மெசேஞ்ஞர் சேவை மூலம் ரிலையன்ஸ் தனது வணிகத்தை மேம்படுத்தும் எனவும் தெரிகிறது.

அதே சமயம், கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், டிஜிட்டல் சந்தையில் 900 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இது வெற்றியாக இருக்கும் என கூறப்படுகிறது.