தங்க நகை வாங்கப் போறீங்களா? – ஜனவரியிலிருந்து மதிப்பீடு மாறுது!

தங்க நகை வாங்கப் போறீங்களா? – ஜனவரியிலிருந்து மதிப்பீடு மாறுது!

பணப்புழக்க கெடுபிடி காரணமாக, தமிழகத்தில் தங்கம் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் விற்பனையில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், அதே நேரம், பொதுமக்களுக்கு தரமான தங்கம் கிடைக்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி, ஹால்மார்க் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

halla mark dec 19

அதாவது பல ஆண்டுகளாக, ஹால்மார்க்கில், 22, 20, 18, 16, 14 என, பல்வேறு தரத்தில் தங்கம் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், வரும் ஜன., 1 முதல், 22 காரட், 916 கே.டி.எம்., 18 காரட், 750 கே.டி.எம்., 14, காரட் 565 கே.டி.எம்., ஆகிய மூன்று தரம், அளவுகளில் மட்டுமே தங்கத்தை மதிப்பீடு செய்ய ஹால்மார்க் மதிப்பீட்டாளர்கள், தங்க நகை வியாபாரிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பொதுமக்கள் தங்கம் வாங்கும் போது, அவற்றின் தரத்தை பரிசோதித்து வாங்க வேண்டும். தரம் குறித்து தெரிவிக்காத வியாபாரிகள் மீது புகார் அளிக்கலாம்.தமிழகத்தில் உள்ள தங்க நகை வியாபாரிகள், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தி, சேதாரம், செய்கூலி, தள்ளுபடி உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இதில், எள்ளளவும் உண்மை இல்லை. தங்கம் நிர்ணயம் செய்யப்படும் விலையில், அவர்கள் சலுகை அளிப்பது இல்லை.

மாறாக, அதற்கான பிற தயாரிப்புகளை சுட்டிக்காட்டி, தள்ளுபடி செய்வதாக அறிவிப்பது, உண்மைக்கு புறம்பானது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தமிழகம் முழுவதும் தங்கத்தின் விலையை, வியாபரிகள் சம்மேளனம் நிர்ணயம் செய்து, அறிவிக்க முடிவு செய்துள்ளதாம்.

Related Posts

error: Content is protected !!