துபாய் சாக்லேட்: ஒரு பெண்ணின் ‘பிரசவ காலத் தேடல்’ கோடிகளில் பிசினஸான கதை!
உலகம் முழுவதும் உள்ள ‘புட் பிளாக்கர்ஸ்’ (Food Bloggers) இப்போது ஒரே ஒரு சாக்லேட்டைத் தேடி அலைகிறார்கள். அதுதான் FIX Dessert Chocolatier நிறுவனத்தின் தயாரிப்பான துபாய் சாக்லேட். ஒரு சிறிய சமையலறையில் தொடங்கிய இந்த முயற்சி, இன்று உலகையே தன் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
யார் அந்தச் சூத்திரதாரி?
இந்த சாக்லேட்டின் பின்னணியில் இருப்பவர் சாரா ஹமூடா (Sarah Hamouda) என்ற பெண்மணி. 2021-ல் தனது கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட விசித்திரமான இனிப்புத் தேடலுக்காக (Cravings) இவரே சொந்தமாகச் செய்த சாக்லேட் இது. இன்று இது ‘கான்ட் அஸ் கெட் இட்’ (Can’t Get It) எனும் பெயரில் வைரலாகி வருகிறது.

ஏன் இது இவ்வளவு ஸ்பெஷல்? – ரகசியச் சேதிகள்:
-
மொறுமொறுப்பான உள்ளீடு: சாதாரண சாக்லேட்டுகளில் உள்ளே மென்மையாக இருக்கும். ஆனால் இதில் ‘கடாயிஃப்’ (Kaitaifi) எனப்படும் வறுத்த மாவு இழைகளும், வறுத்த பிஸ்தா கிரீமும் சேர்க்கப்படுவதால், கடிக்கும்போது ஒரு தனித்துவமான சத்தம் கேட்கும்.
-
கையால் வரையப்படும் கலை: ஒவ்வொரு சாக்லேட் பாரும் ஒரு ஓவியம் போல வண்ணமயமான ‘கோகோ பட்டர்’ கொண்டு கையாலேயே பெயிண்ட் செய்யப்படுகிறது. அதனால் ஒரு சாக்லேட் போல மற்றொன்று இருக்காது.
-
கிடைப்பதே அரிது: துபாயில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இது விற்பனைக்கு வரும். ஆன்லைனில் ஆர்டர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ‘அவுட் ஆஃப் ஸ்டாக்’ ஆகிவிடும். இந்த ‘ஸ்கேர்சிட்டி’ (Scarcity) பிசினஸ் தந்திரமே இதன் விலையையும் தேவையையும் ஏற்றியுள்ளது.
பிசினஸ் அறுவடை:
-
உலகளாவிய காப்பி கேட்ஸ்: இந்த சாக்லேட் கிடைக்காத நாடுகளில், செஃப்-கள் மற்றும் உள்ளூர் பிராண்டுகள் அதே போன்ற ‘டூப்’ (Dupes) சாக்லேட்டுகளைத் தயாரித்து லட்சக்கணக்கில் லாபம் பார்க்கின்றனர்.
-
மூலப்பொருள் தட்டுப்பாடு: இதன் தாக்கம் எவ்வளவு என்றால், உலகச் சந்தையில் பிஸ்தா கிரீம் மற்றும் கடாயிஃப் நூடுல்ஸ் ஆகியவற்றின் தேவை 300% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
மார்க்கெட்டிங் செலவு பூஜ்ஜியம்: விளம்பரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல், வெறும் ‘TikTok’ மற்றும் ‘Reels’ மூலம் மட்டுமே இது உலகப் புகழ்பெற்றது.



