டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு விஜய் சேதுபதியிடம் அதிகரித்து விட்டது.. அந்த விஜய்சேதுபதியை வைத்து சீமராஜா, எம்.ஜி.ஆர். மகன் போன்ற பிளாப் படங்களை கொடுத்த டைரக்டர் பொன்ராம் தங்கள் இருவரின் கணக்கிலும் எக்ஸ்ட்ரா ஒரு மொக்கை படத்தை சேர்த்துக் கொண்டார்.ஆம்.. ஒரு வெட்டி யூத் ஊரில் பந்தாவாக திரியும் தாதாவோடு மோத வேண்டிய சூழல் வருகிறது. பிறகென்னா? ஆக்ரோஷமாகி சவால் விட்ட தாதாவை டி.எஸ்.பி-யாகி பழி தீர்க்கும் நாயகன் கதையே DSP!
அதாவது பூக்கடை வியாபாரி சண்முகம் (ஞான சம்பந்தம்) தனது மகன் வாஸ்கோடாகாமாவை (விஜய்சேதுபதி) எப்படியாவது ஒரு கவர்மெண்ட் ஜாப்பில் சேர்த்து விட வேண்டுமென்று மெனக்கெடுகிறார். இதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு எந்த வேலைக்கும் போகாமல், நண்பர்களுடன் சேர்ந்து சரக்கடித்துக் கொண்டு ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார் வாஸ்கோடாகாமா. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் உயிர் நண்பனின் அப்பாவை முட்டை ரவி (பாகுபலி பிரபாகர்) பிரச்சினை ஒன்றில் கொன்று விட, வாஸ்கோடாகாமாவுக்கும், முட்டை ரவிக்கும் இடையே விரோதம் முளைத்து முட்டை ரவியை சந்திக்கும் வாஸ்கோடாகாமா, பொதுவெளியில் அடித்துத் துவைத்துக் காயப் போட்டுவிடுகிறார். ரெளடிக்கு பயமே முதலீடு என்றிருக்கும் நிலையில், அந்த பயத்தை உடைத்த வாஸ்கோடாகாமாவை கொன்றே தீருவேன் என்ற வெறியோடு சுற்றுகிறார் ரவி. அதை அடுத்து தலைமறைவாகி டிஎஸ்பி-யாகி ஊருக்குள் வந்தால் அந்த முட்டை ரவி எம் எல் ஏ-வாகி இருக்கிறான்.. அதை நடந்த கதையே இது..
கோலிவுட்டில் சகல ஹீரோக்களும் பயன்படுத்திய காக்கிச்சட்டைக் கதையை ஒட்டு போட்டு விஜய் சேதுபதிக்கு மாட்டி விட்டிருக்கிறார் பொன்ராம். வாஸ்கோடாகாமா கேரக்டரில் வரும் விஜய்சேதுபதி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக வருகிறார்., போகிறார் அவ்வளவே…நாயகியாக நடித்திருக்கும் அனு கீர்த்தி, கொஞ்சமும் எடுபடவில்லை… விஜய்சேதுபதிக்கும் அவருக்கும் இடையேயான லவ் சீன்கள் கொஞ்சம் கூட ரசிக்கமுடியவில்லை. வில்லனாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். பிற எந்த கதாபாத்திரங்களும் மனதில் நிற்க வில்லை. சிரிப்புக் காட்ட புகழ், சிங்கம்புலி, தீபா சங்கர் என ஏகப்பட்ட பேர் இருந்தும் வேஸ்ட்
போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு, ‘குடிச்சிருக்கானா..? கம்மியா குடிச்சிட்டு வீட்டுல போயி தூங்கச் சொல்லுங்க!’ என அட்வைஸ் பண்ணும் டி.எஸ்.பி க்ளைமாக்ஸில் சீரியஸாக ஃபைட் செய்யும் போதுகூட ஹீரோவிடம், ‘5 சான்ஸ் தர்றேன்’ என்று சொல்வதும் ஒரு டீ சாப்பிட்டு விட்டு சண்டை போடலாமென்பதெல்லாம் கடுப்பேத்தும் காட்சிகள்..
கேமரா, மியூசிக் எதுவுமே ஈர்க்கவில்லை
மொத்தத்தில் – இந்த டிஎஸ்பி= சின்னத்திரையில் கூட காண தகுதி இல்லாத படம்