அம்மை நோயை ஒழிக்கும் மருந்து கண்டு பிடித்த டாக்டர் ஹாண்டர்சன் காலமானார்.

அம்மை நோயை ஒழிக்கும்  மருந்து கண்டு பிடித்த டாக்டர்  ஹாண்டர்சன் காலமானார்.

பொதுவாகவே தட்பவெப்பநிலை மாறும்போது வைரஸ்கள் வேகமாக வேலையைக் காட்டத் தொடங்கும். சளி, காய்ச்சல் தொடங்கி அம்மைவரை பல நோய்கள் தாக்கும். குறிப்பாக அம்மை நோயின் தாக்கம், இந்தப் பருவத்தில் அதிகமாக இருக்கும். தெய்வ நம்பிக்கையுடன் இணைத்துப் பார்க்கப்படும் அம்மை நோய் அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக பீடிக்கப்பட்டு பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி ஹாண்டர்சன்(87) காலமாகி விட்டார்

world aug 22

முன்னதாக ஐரோப்பிய கண்டத்தில் வெகுவாக பரவிய இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி பணிக்காக கடந்த 1972ம் ஆண்டு அப்போதைய யுகோஸ்லேவியா நாட்டில் உள்ள பெல்கிரிச் நகருக்கு ஹாண்டர்சன் சென்றார். உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் அம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு ஹாண்டர்சன் தலைமை வகித்தார். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் புளூம்பர்க் சுகாதாரப் பள்ளி ஆகியவற்றின் ‘டீன்’ ஆக கடந்த 1977-1990 ஆண்டுகளுக்கிடையே பணியாற்றிய இவர், பின்னாளில் இந்த இருநிறுவனங்களும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து தயாரிக்கும் ஆராய்ச்சிக்கான தனிப்பிரிவை உருவாக்கினார்.

ஆனாலும் உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றி சுமார் பத்தாண்டுகளில் பரவலாக அம்மை நோயை இவர் கட்டுப்படுத்தினார். கடந்த 2001ம் ஆண்டில் அமெரிக்காவை ஆந்த்ராக்ஸ் நோய்க்கிருமி தாக்கியபோது அந்நாட்டின் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான சிறப்பு முகாம் அலுவலகத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக உடல் கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த ஹாண்டர்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி காலமானதாக அவரது குடும்பததினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts