ஆம் ஆத்மியின் ஹாட்ரிக் வெற்றிக்கான சூட்சமம் என்ன தெரியுமா?

ஆம் ஆத்மியின் ஹாட்ரிக் வெற்றிக்கான சூட்சமம் என்ன தெரியுமா?

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை அடைந்து ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்த போதிலும் கடந்த முறை வாங்கிய தொகுதிகள் மற்றும் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 54.3 சதவீத ஓட்டுகள் பெற்று, 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்த லில் தற்போது வரை அக்கட்சி 51.68 சதவீத ஓட்டுகள் பெற்று 54 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்ததுடன், தொகுதிகளின் எண்ணிக்கை யும் குறைந்துள்ளது என்றெல்லாம் செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டு இருக்கிறது.அதே சமயம் அங்கு மூன்றாம் முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி அடைந்ததற்கு அக்கட்சி தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொண்டதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கிய ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 40 இடங்களில் முன்னிலை, பாஜக 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது இதனால் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம் ஏற்கனவே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இம்முறை ஆம் ஆத்மியின் வெற்றியை பார்க்கும்போது, வளா்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.. தலைநகரில் மதங்களுக்கிடையே எவ்வளவுதான் வெறுப்புணர் வினை வளர்த்தாலும், அதன்மூலம் சிலர் ஆதாயம் தேட நினைத்தாலும் தாங்கள் எந்த அளவுக்கு கவனிக்கப்படுகிறோம் என்பதில்தான் மக்கள் தெளிவாக உள்ளனர். மக்களுக்கு தேவையான குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆம் ஆத்மி அரசு வழங்கியது மிகப்பெரிய தாக்கத்தை தந்துள்ளதை மறுக்க முடியாது.

அது மட்டுமின்றி கெஜ்ரிவாலின் இந்த வெற்றியால் தேசிய அரசியலில் மாற்றம் வருமா என்றால் நிச்சயம் வரலாம்.. மாற்று சக்திக்காக மக்கள் நாடு முழுவதுமே ஏங்கிக் கொண்டுள்ளனர். கெஜ்ரி வாலுக்குக் கிடைத்துள்ள வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும். காரணம், எந்த பண பலமும், அதிகார பலமும் இல்லாமல் கிடைத்த சாமானிய மக்களின் வெற்றி இது. அதில் யாருக்கும் சந்தேகமே தேவையில்லை.

இந்திய அரசியல் வரலாற்றில் நிச்சயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியதுதான். இரு பெரும் அரசியல் சக்திகளை “ஜஸ்ட் லைக் தட்” துடைப்பத் தின் துணை கொண்டு அவர் விரட்டியிருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அமித் ஷா போன்ற பெரும் ஜாம்பவானின் வியூகத்தை உடைத்தெறிந்து வெல்வது என்பது மிகப் பெரிய சாதனைதான். ஆனால் கெஜ்ரிவால் சரியாக யோசித்து செயல்ப்பட்டு சாதித்துள்ளார். இந்த ஹாட்ரிக் வெற்றிக்கு கடந்த லோக்சபா தோல்விதான் கெஜ்ரிவாலுக்கு காரணியாக இருந்து இருக்கிறது என்றால் சொன்னால் அதிசயமாக இருக்கும். ஆம் .. ஆம் ஆத்மி இந்த சட்டசபை தேர்தலை மிகவும் கவனமாக எதிர் கொண்டது. இதற்கு மிக முக்கிய காரணம் லோக்சபா தேர்தலில் அந்த கட்சி அடைந்த தோல்வி. லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஒரு எம்பியை கூட பெறவில்லை.

மிகப்பெரிய அளவில் வாக்கு வங்கி இருந்தும். ஆட்சியே கையில் இருந்தும், ஆம் ஆத்மி கட்சியால் எம்பி பதவியை பெற முடியவில்லை. இந்த தோல்வி ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பாடம் கற்றுக் கொடுத்தது. எங்கே தவறுஆம் ஆத்மி தான் எங்கே தவறு செய்கிறோம் என்று சுயபரிசோதனை செய்து கொண்டது. பாஜக எப்படி வென்றது, பாஜகவின் வலையில் நாம் எப்படி விழுந்தோம் என்று சுதாரித்துக் கொண்டது.

முக்கியமாக பாஜகவின் பிரச்சாரம்தான் டெல்லியில் லோக்சபா தேர்தலில் அந்த கட்சியின் வெற்றிக்கு வழி வகுத்தது. இதனால் பாஜகவின் பிரச்சாரம் போலவே மிகவும் அதிரடியாக ஆம் ஆத்மி சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்தது. ஆம் ஆத்மியின் அதிரடி பிரச்சாரம் பாஜகவை பல இடங்களில் நிதானம் இழக்க வைத்தது. வளர்ச்சி முக்கியம்அதேபோல் மிக முக்கியமாக ஆம் ஆத்மி வேறு எதை பற்றியும் பேசாமல், நேரடியாக தாங்கள் செய்த நல்லதிட்டங்களை பற்றி மட்டுமே பேசியது.

பெரிய அளவில் பாஜகவை அக்கட்சி எதிர்க்கவில்லை. அதேபோல் மோடியை பெரிய அளவில் ஆம் ஆத்மி விமர்சிக்கவில்லை. இதில் மட்டும் ஆம் ஆத்மி கவனமாக இருந்தது. தாங்கள் செய்த நலத் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என்று அது தொடர்பாக மட்டுமே ஆம் ஆத்மி பேசி வந்தது. இது அக்கட்சிக்கு பெரிய அளவில் பலன் அளித்தது. இதனிடையே லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி வைக்க முயன்றது. எப்படியாவது கூட்டணி வைக்க முடியுமா என்று ஆம் ஆத்மி தீவிரமாக முயன்று வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு ஒத்துழைக்க வில்லை. ஆனால் காங்கிரஸ் உடன் இணைய முயன்றது , ஆம் ஆத்மி கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தது.

தற்போது சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மீது கவனம் செலுத்தாமல், தனித்து தைரிய மாக நின்று வென்றுள்ளது.சிஏஏ எப்படிஅதேபோல் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை ஆம் ஆத்மி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பலரின் வாக்குகளை இழக்க நேரிடும். ஆதரவு தெரிவித்தாலும் பலரின் வாக்குகளை இழக்க நேரிடும். இதனால் அவ்வப்போது ஆதரவு தெரிவிப்பது போல ஆதரவும், எதிர்ப்பு தெரிவிப்பது போல எதிர்ப்பும் அக்கட்சி தெரிவித்தது.

இதெல்லாம் போக சில இடங்களில் பாஜகவே தானாக முன்வந்து ஆம் ஆத்மி விரித்த வலையில் விழுந்தது. டெல்லியில் பிரச்சாரம் செய்த்த மனோஜ் திவாரி தொடங்கி உபி முதல்வர் ஆதித்யநாத் வரை சர்ச்சையாக பேசினார்கள். துப்பாக்கியால் சிஏஏ போராட்டக்காரர்களை சுட வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தனர். இதெல்லாம் பாஜகவிற்கு பின்னடைவாக மாறியது.

இது உத்தர பிரதேசம் இல்லை டெல்லி என்பதை அக்கட்சி மறந்துவிட்டது. இதை கெஜ்ரிவாலும் பயன்படுத்திக் கொண்டார். இப்போது 2024-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேதான் போட்டி என்பதை குறிக்கும் பதாகைகளுடன் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதாவது ஆம் ஆத்மியின் பிரதமர் வேட்பாளர் கெஜ்ரிவால்தான் என்கின்றனர்.

ஹூம்.. அரசியலில் எதுவும் நடக்கும்.. ஆனால் அதற்கு கெஜ்ரிவால் மாதிரி கொஞ்சமாச்சும் உழைக்கோணும்!

அகஸ்தீஸ்வரன்!

error: Content is protected !!