மூளையைத்தான் குழப்பாதீங்க!

மூளையைத்தான் குழப்பாதீங்க!

யற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது.ஆனால் நாம் எல்லாச் சமயங்களிலும் நூறு சதவீதம் நமது மூளையைப் பயன்படுத்தவே செய்கிறோம் என்போருமுண்டு.

அந்த வகையில் நம் அன்றாட செயல்களை சிறப்பாக செய்ய முக்கிய பங்கு வகிப்பது நம் மூளைதான். மூளை சரியான முறையில் இயங்கினால் மட்டுமே நாமும் சரியான பாதையில் செல்ல முடியும். இவ்வாறு நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கும் மூளையை நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள் மூலம் குழம்ப செய்கிறோம் என்பதை கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும். நம்முடைய தினசரி நடிவடிக்கையில் செய்கின்ற சில செயல்கள் நமக்கே தெரியாமல் நம்முடைய மூளையின் செயல்பாட்டை பாதிக்குமாம். அப்படி என்ன பழக்கவழக்கம்? என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாமா?.

ப்ரேக் ஃபாஸ்ட்

நம் அன்றாட பழக்கவழங்களில் முக்கியமானது காலை உணவு. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை முறையாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. காலை உணவை அதிகமாகவும், மத்திய உணவை (காலை உணவு) அதை விட குறைவாகவும், இரவு உணவை (மதிய உணவு) அதையும் விட குறைவாகவும் எடுத்து கொள்ள வேண்டும் என்ற வரையறையே உண்டு. ஆனால், பலர் காலை உணவை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு காலை உணவை தவிர்த்தால் மூளை நம்முடைய பசி மற்றும் உணவு சுழற்சியில் குழம்பி விடுமாம்.

புகை பகை

புகைப்பிடிப்பது கேடு தரும், உயிரை கொல்லும். இதுபோன்ற எத்தனை வரிகள் சொன்னாலும், புகைபிடிப்பவர்கள் திருந்துவது அரிதாகவே இருக்கிறது. புகைப்பிடிப்பவர்களின் மூளையின் செயல்பாட்டில், நிறைய மாற்றங்கள் ஏற்படுமாம்.

தூக்கமின்மை

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது கடமையாக இருக்க வேண்டும். ஆனால், தூக்கத்தை தொலைப்பவர்கள் இங்கு அதிகம். போதிய அளவு தூக்கமின்மையாலும் மூளையின் செயல்பாட்டில் சிக்கல்கள் உண்டாகுமாம்.

மல்ட்டிடாஸ்க்

சிலர் ஒரு வேலை செய்துக்கொண்டே மற்றொரு வேளையிலும் கவனம் செலுத்துவதுண்டு. ஒரே நேரத்தில் நிறைய வேலைகள் செய்தாலும் மூளை குழம்பி போகுமாம்.

நீர்ச்சத்து குறைபாடு

தண்ணீர் அருந்துவதற்கு சிலரிடம் ஞபாகப்படுத்தும் நிலை இருக்கிறது. உடலிற்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்காத போதும் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுமாம்.

மொபைல் போன் பார்ப்பது

எல்லா நேரங்களிலும் கண்கள் மொபைல் போனை விட்டு விலகாத வண்ணம் நம் பழக்கவழக்கங்கள் மாறி விட்டது. அந்த வகையில், நாம் சூரிய ஒளியின் கீழ் நின்று கொண்டு மொபைல் போன் பார்த்தால் மூளை பாதிக்குமாம்.

ஓய்வு

உடல் நலம் சரியில்லாத நேரங்களில், ஓய்வு எடுக்காமல் வேலை செய்தாலும் மூளையில் பாதிப்பு உண்டாகுமாம்.இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகள் மூளையை பெரிதளவில் பாதிக்கும் என்பதை அறிந்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

செந்தில் வசந்த்

error: Content is protected !!