காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் : உலக செலவாணி நிதியம்!

காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் : உலக செலவாணி நிதியம்!

சர்வதேச அளவிளான வளர்ச்சிக்கு காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக உலக செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்றவற்றால் சூழலியலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக 2000 ஆண்டு முதல் 2019 ஆண்டுவரை 4.2 பில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். உலக பொருளாதாரத்திற்கு 2.97 டிரில்லியன் டாலர் செலவாகும்.

கடந்த 20 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகள் இரட்டிப்பாக இருப்பதற்கு காலநிலை மாற்றம் பெரும்பாலும் காரணம் என ஐக்கிய நாடுகள் சபை திங்களன்று தெரிவித்துள்ளது. 2000 முதல் 2019 வரை 7 ஆயிரத்து 348 பெரிய பேரழிவு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இதனால், 1.23 பில்லியன் பேர் பலியாகியுள்ளனர். 4.2 பில்லியன் மக்களை பாதித்துள்ளது. உலகப் பொருளாதாரத்திற்கு 2.97 டிரில்லியன் டாலர் வரை செலவாகும் என தெரிவித்துள்ளது. 1980 முதல் 1999 வரை 4 ஆயிரத்து 212 பெரிய அளவிலான இயற்கை பேரழிவுகளைவிட இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வெள்ளம், வறட்சி, புயல்கள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் உள்ளிட்ட காலநிலை தொடர்பான பேரழிவுகள் அதிகரிப்பதே இந்த அதிகரிப்புக்கு காரணமாகும். அதிக வெப்பமும் ஆபத்தானது என்பதை நிரூபிக்கிறது.

இந்நிலையில் 52 நாடுகளின் நிதியமைச்சர்கள் பங்கேற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பன்னாட்டு செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா, “ கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் தங்கள் நிதிகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தைக் குறைக்கவும், காலநிலை மாற்ற பாதிப்பை உணர்ந்து பசுமை முதலீடுகளை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர் அவ்வாறு செய்தால், 15 ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை சராசரியாக 0.7% உயர்த்த முடியும் எனக் குறிப்பிட்டார்.

”காலநிலை மாற்றம் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு ஆழ்ந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகளாவிய கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பசுமை முதலீடுகளில் கவனம் செலுத்துவதை உறுதி செய்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம்.” என கிறிஸ்டலினா தனது உரையில் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!