கொரோனா + தடூப்பூசி + மரணங்கள் = அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

கொரோனா + தடூப்பூசி + மரணங்கள் = அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

கொரோனாவால் 2020-22ல் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேர் 2023க்குள் இறந்துள்ளனர்-தமிழக பொதுசுகாதாரத்துறை (முழுமையற்ற)ஆய்வின் முடிவு-கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?-

தமிழக பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில்,2020மார்ச்-2022 மார்ச் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேர் 2023க்குள் இறந்துபோயுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதில் 20% இறப்புகள் 61-80 வயதினருள் நடந்துள்ளது.

40 வயது-கீழான வயதினருள் 1% பேர் இறந்துள்ளனர்.

சென்னை நீங்கலாக 1,220 நோயாளிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 வருட காலத்திற்குள் 73 பேர் இறந்துள்ளனர்.

இறப்பிற்கு இயற்கை காரணங்கள்,கொரோனா பின்னர் வரும் மருத்துவ பிரச்சனைகள்(Long-Covid)காரணமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும்,கொரோனா தடுப்பூசி காரணமாக இறப்புகள் நிகழ்ந்ததா? என ஆராயப்படாமல் விடுபட்டுள்ளது ஆய்வின் நோக்கம்/முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புத் தூண்டுவதாக உள்ளது.

குழந்தைகள் மத்தியில் இறப்பின் தாக்கம் குறைவானதாகவும், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் இறப்பு பெரும்பாலும் இல்லவே இல்லை என்பது புள்ளிவிபரமாக இருந்தும்,(கொரோனா தடுப்பூசி 10 வயதினருக்கு கீழ் அதிகமாக கொடுக்கப்படவில்லை.)இதை பொதுசுகாதாரத்துறை இயக்குநர் நன்கறிந்தும்,கொரோனா தடுப்பூசி காரணமாக இறப்பு நிகழ்ந்ததா?என ஆய்வே செய்யப்படாமல் விட்டது எப்படி சரியாகும்?

கொரோனா 2ம் அலையில் 60%பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும்,அவர்களில் 41% பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பதும் புள்ளிவிபரங்களாக உள்ளது. இறந்தவர்களில் 15.5% பேருக்கு சர்க்கரைநோயும்,13.6% பேருக்கு அதிக இரத்தஅழுத்தமும் இணைநோய்களாக இருந்தது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின் 50% பேருக்கு புற்றுநோய்,இருதய செயலிழப்பு(Cardiac failure),தொடை எலும்பு அழுகிப்போதல்(Avascular necrosis of femur)போன்றவை ஆய்வில் கலந்து கொண்டோருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னரே 87%பேருக்கு தொடை எலும்பு அழுகிப்போதல்(Avascular necrosis of femur)பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. (கொரோனா பாதிப்பின் போது ஸ்டீராய்ட் மாத்திரை தொடர்ச்சியாக எடுக்கப்படும் போது,தொடை எலும்பு அழுகிப்போதல் நிகழ வாய்ப்புள்ளபோது,அது காரணமாக பிரச்சனை எழுந்ததா? என ஆய்வு செய்யப்படாமல் இருந்தது சரியா?)

கொரோனா தொற்றுக்குப் பின் மாரடைப்பு(Heart attack)அதிகமாகியுள்ளது எனக் கூறும் ஆய்வு அது தீடீர் இருதயநிற்றல்(Cardiac arrest due to myocarditis which may be vaccine induced-கொரோனா தடுப்பூசியும் இருதயஅழற்சியை எற்படுத்தி இருதயநிற்றலுக்கு வித்திட்டு இறப்பை ஏற்படுத்த முடியும்.)காரணமாக நிகழ்ந்ததா?என உறுதிசெய்யாமல் விட்டது சரியா?

கொரோனா பாதிப்பிற்குப் பின் மூளை மண்டல பாதிப்பு அதிகமானது எனக் கூறும் ஆய்வு அது தடுப்பூசி(கோவிஷீல்ட்)காரணமாக எற்பட்ட இரத்த உறைதல்(Clots),இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி(Arteritis) காரணமாக நிகழ்ந்ததா?என ஆய்வு செய்யாமல் விட்டது எப்படி சரியாகும்?

கொரோனா பாதிப்பிற்கு பின் 5ல் 1வருக்கு பசிக்குறைவு,அதிக சோர்வு/அசதி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நீண்டநாள் கொரோனா பாதிப்பிற்கு கொரோனாவின் போது மருத்துவனை சேர்க்கை,பிராணவாயு தேவைப்பட்டது,அதிக நுரையீரல் பாதிப்பு,செயற்கை சுவாசத்தின் தேவை,இணைநோய்களின் இருப்பு போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு,இனிவரும் காலங்களில் கொரோனா சிகிச்சையின் போது எதற்கு உரியமுக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்(உ.ம். இணைநோய் உள்ளவர்கள்)என அரசு தெரிந்து செயல்பட வேண்டும் எனக் கூறினாலும்,

மேற்கூறிய குறைபாடுகளுடன் ஆய்வை செய்திருப்பது சரியா?என ஆய்வாளர்கள் அல்லவா சிந்தித்து ஆய்வின் குறைபாடுகளை களைய முன்வர வேண்டும்.?!

12.12.23 பத்திரிக்கை செய்தியில் மருதுபாண்டியன் எனும் முதுகலை மருத்துவர் அவர்கள்(30 வயது)காரணம் தெரியாமல் இறந்துபோயுள்ளார் என்பது பதிவாகியுள்ளது. வெளிக்காயம் ஏதும் இல்லை. இறப்பிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என செய்திவெளிவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசியும் இறப்பிற்கு காரணமாக இருக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு,அரசு அதை உறுதிபடுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள முடியாது.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.  மேற்கூறப்பட்ட ஆய்வு போன்று குறைப்பாடுகளுடன் இருந்தால் அறிவியல் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் என்பதை அரசு உணர்ந்து, முறையான ஆய்வுகளை செய்ய அரசு/மருத்துவர்கள் முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.

சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2021ல் காலக்கெடு முடிந்த மருந்தினை செலுத்தியதால் தன் கணவர் உயிரிழந்ததாகத் தொடர்ந்த வழக்கில்,அரசு/மருத்துவர் தரப்பில் அந்த மருந்து இறந்தவருக்கு செலுத்தப்படவில்லை என வாதிட்டாலும்,தெளிவான வீடியோ அடிப்படையில் காலக்கெடு முடிந்த மருந்து செலுத்தப்பட்டது உறுதியானதால்,சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 1 இலட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

அரசும்/மருத்துவர்களும் மக்கள் நலன் கருதி உண்மையைச் சொல்ல முன்வர வேண்டும்.

அறிவியலும்/அறமும் நம்மை வழிநடத்தட்டும்.

மரு.வீ.புகழேந்தி. 

error: Content is protected !!