இந்தோ-திபெத் எல்லையில் ‘கான்ஸ்டபிள்’ பணி வாய்ப்பு!

இந்தோ-திபெத் எல்லையில் ‘கான்ஸ்டபிள்’ பணி வாய்ப்பு!

ந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆந்தை ரிப்போர்ட்டர் வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்க்-கை கிளிக் செய்து வரும் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!