10 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுமாம்!

10 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுமாம்!

ரும் ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள வாரியத் தேர்வுகள் தனிப்பயிற்சி (Coaching Classes) தேவைகளை குறைக்க தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. மேலும், மாதக்கணக்காக மனப்பாடம் செய்வதை விட, மாணவர்களின் உள்ளார்ந்த தனித்திறன்களை சோதிக்கும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும், வாரியத் தேர்வுகளில் உள்ள பதட்டங்களைத் தணிக்கும் வகையில், மாணவர்கள் வாரியத் தேர்வுகளில் இரண்டு நிகழ்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

இந்நிலையில்தான், 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு நடத்தப்படவேண்டும் என்றும் அப்படி 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் போது எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் படி புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) தயாராகிவிட்டதாகவும், அதற்கான பாடப்புத்தகங்கள் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல மாநில தங்களுக்கென தனிப்பாடத்திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும், அப்படி 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் போது எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

மேலும் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிப் பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டுமாம். அதில் ஒன்று இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும். இவை அனைத்தும் புதிய கல்விக் கொள்கைப்படி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு பொதுத் தேர்வையே மாணவர்கள் எதிர்கொள்ள திணறும் போது, இது எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது மத்திய அரசின் மறைமுக இந்தி திணிப்பு முயற்சி என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

error: Content is protected !!