நம்ம புதுயுகம் வழங்கும் “சினிமா 2.0”!

நம்ம புதுயுகம் வழங்கும் “சினிமா 2.0”!

சினிமா என்பது  பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி,மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்ங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

இப்போது விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போன புது யுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு தினந்தோறும் விசேஷ விருந்து படைக்கிறது.”சினிமா 2.0”  என்ற நேமில் இந்த நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை காலை11:30 மணி மற்றும் ஞாயிறு மதியம்12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர். தொகுப்பாளர்கள் ஸ்ரீ மற்றும் ஜெனி, இருபதுக்கும் மேற்பட்ட சினிமா செய்திகள் ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என அன்றைய சினிமா தகவல்களை சுடச்சுட அன்றைக்கே வழங்கும் சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

error: Content is protected !!