நிலாவை விட 8 மடங்கு அதிகம் ஒளிரும் செயற்கை நிலா: சீனா ஆர்வம்!

நிலாவை விட 8 மடங்கு அதிகம் ஒளிரும் செயற்கை நிலா: சீனா ஆர்வம்!

நம் விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தபோதும் நாம் முதல் முதலாக அறிந்தது சூரியனையும் சந்திரனையும்தான். விண்வெளி ஆய்வில் நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் 19, 20-ம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகள்தான் அத்துறையில் முன்னேறியிருந்தன. இன்று நாமும் அதில் 4-ம் இடம் பெறும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். நிலவில் ஆய்வு செய்த பலரும் நீரில்லை என்று சொன்னபோது நமது சந்திராயன் நிலவின் மூலக்ககூறுகளில் நீர் இருப்பதை உலகுக்குச் சொன்னது. அது மட்டுமின்றி இந்த நிலா என்பதற்கு தமிழில் :
1) அம்புலி,
2) திங்கள்,
3) குபேரன்,
4) அருச்சிகன்,
5) நிகாகரன்,
6) இமகரன்,
7) ஆலோன்,
8) களங்கன்,
9) தண்சுடர்,
10) கலையோன்,
11) இராக்கதிர்,
12) தானவன்,
13) உடுபதி,
14) அமுதகிரணன்,
15) இந்து,
16) சோமன்,
17) பிறை,
18) மதி,
19) சசி,
20) விது,
21) நிலவு என்ற வேறு பெயர்கள் வைத்து அழைத்து வந்ததும் நாம்தான். இப்படி இயற்கையாக உள்ள ல் நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் செயற்கை நிலா ஒன்றை விண்ணுக்கு அனுப்ப சீனா ஆர்வம் காட்டி வருகிறது.

ஆம்.. சீனா வரும் 2020ம் ஆண்டு தனக்கென ஒரு செயற்கை நிலவை விண்வெளியில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வெளிச்சம் நகர்புறங்களில் தெருவிளக்குகளுக்கு பதிலாக பயன்படும். அதன் காரணமாக மின்சார செலவு குறையும் என சீனா பத்திரிகையான சீனா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது சீனாவின் தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள செங்டு நகரில் இந்த திட்டதிற்ப் கான ஒளியூட்டும் செயற்கை கோள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை கோள்கள் சூரியன் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம் உண்மையான நிலவை விட 8 மடங்கு வெளிச்சத்தை தரும். இந்த செயற்கை நிலவு திட்டத்திற்காக தியான் ஃபூ நியூ ஏரியா சயின்ஸ் சொசைட்டி(Tian Fu New Area Science Society) என்ற நிறுவனம் செயற்கை கோள்களை தயாரித்து வருகிறது.

அந்த நிறுவனத்தின் தலைவர் வூ சன்ஃபெங் கடந்த அக்டோபர் 10ம் தேதி செங்டுவில் நடந்த மாநாட்டில் இந்த செயற்கை நிலவு திட்டத்தை அறிவித்தார். இந்த நிறுவனத்துடன் மேலும் பல்வேறு சீன நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றன.

சீனாவின் செயற்கை நிலவு திட்டத்தின் கீழ் வரும் 2020ம் ஆண்டு சீனாவின் சிசுவான் மாகா ணத் தில் உள்ள ஜிசாங் செயற்கைகோள் செலுத்தும் நிலையத்தில் இருந்து முதல் செயற்கைகோள் சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்படும் என சீனா டெய்லி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் வூ சன்ஃபெங் தெரிவித்தார்.

இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக செயல்பட்டால் சுமார் 50 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் இருக்கும். அதன் காரணமாக நகர்புரங்களில் தெருவிளக்குகள் தேவைப் படாது. அதனால் செங்குடு நகரில் ஆண்டுக்கு 17 கோடி டாலர் மிச்சமாகும். இயற்கை பேரழிவு காலத்தில் ஏற்படும் மின்வெட்டுகளின் போது இரவு நேரத்தில் மீட்பு பணிகள் நடக்க இந்த செயற்கை கோள்கள் உதவிகரமாக இருக்கும் என வூ சன்ஃபெங் கூறினார்.

இதுபோன்ற ஒரு முயற்சியை 1990களில் ரஷ்ய விஞ்ஞானிகள் செய்துள்ளதாக தகவல்கள் உண்டு. ஜினாம்யா அல்லது பானர் என்ற திட்டத்தின் கீழ் மிக பெரிய அளவிலான கண்ணாடிகள் மூலம் இரவில் சூரிய ஒளியை பிரதிபலிக்க அவர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!