அயோத்தி தாசருக்கு மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அயோத்தி தாசருக்கு மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மிழக அரசின் சார்பில் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பில் சென்னை கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது. அவரின் 175வது பிறந்த நாளை முன்னிட்டு அந்த மணி மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, ஏ.வ. வேலு, திராவிடர் கழகத் தலைவர் கி.விரமனி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அயோத்திதாசர் குறித்து காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்ததன்படி, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், ‘அறிவொளி இல்லம்’ என்ற பெயரில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அயோத்திதாசரின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுவதாக கூறிய முதலமைச்சர், மொழி, கலாச்சாரத்தை தாண்டி தமிழர், திராவிடர் என்பதை அடையாள சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசர் என புகழாரம் சூட்டினார்.

அயோத்திதாசர், 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, பூர்வகுல தமிழர்கள் என குறிப்பிட கூறியவர் எனவும், 1907ஆம் ஆண்டு ஒரு பைசா தமிழன் எனும் இதழை ஆரம்பித்து, ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என கூறியவர் எனவும் தெரிவித்தார்.

இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது சாதி, மதம் என கூறியவர் அயோத்திதாசர் எனவும், அவரது நினைவாக 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி செலவில் ஆதிதிராவிடர் குடியிருப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

error: Content is protected !!