சரக்குக் கப்பல் ஒன்றை வைத்து உலக அளவில் சதுரங்க ஆட்டம் நடக்குது!

சரக்குக் கப்பல் ஒன்றை வைத்து உலக அளவில் சதுரங்க ஆட்டம் நடக்குது!

Lack of imagination என்பார்கள். அதாவது கற்பனை பற்றாக்குறை.. இப்படியெல்லாம் ஒரு வேளை நடந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பதை நினைத்துப் பார்த்து அதற்கு ஏதுவாக தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இங்கு மேட்டர்..

பறவைகள் உடலில் சிறிய ரக வெடிகுண்டை கட்டி, அவற்றை அனுப்பி ரிமோட் மூலம் இயக்கி தாக்குதல் நடத்தலாம்.. இன்னும் புரியும்படி சொன்னால், பயணிகள் விமானங்களையே ஏவு கணைகள்போல் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை தகர்க்கலாம்.. இப்படித்தான் நியூயார்க் உலக வர்த்தக மைய கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இப்போ எகிப்து சூயஸ் கால்வாய் மேட்டருக்கு வருவோம்..

சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தை 10 நாட்கள் சுற்றிக் கொண்டு போவதை தவிர்ப்பதற்காக வெட்டப்பட்டதுதான் 192 கிலோ மீட்டர் நீளமுள்ள சூயஸ் கால்வாய். மகாத்மா காந்தியின் வயது இந்த கால்வாய்க்கு. ஆறில் ஒரு பங்கு, உலகின் கடல் வழி சரக்கு போக்குவரத்து இந்த கால்வாயையே நம்பியுள்ளது.

சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை 6 ஆயிரம் கன்டெய்னர்களில் தாங்கியுள்ள ஒரு கப்பல் கால்வாயின் குறுக்கே நின்று விட்டுள்ளது..இரண்டே கால் லட்சம் டன் எடையுள்ள அரை கிலோ மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்டமான சரக்கு கப்பல் காற்றின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் திசை மாறிவிட்டது என்கிறார்கள்.. இதனால் தற்போது வரை 270 கப்பல்கள் அந்த கால்வாயை கடக்க முடியாமல் டிராபிக் ஜாம்.. இதற்கு முன்பு இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டதே இல்லை என்கிறார்கள்.

ஏராளமான நாடுகளில் இறக்குமதி பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் பொருளாதாரமே சரியும் என்றும் ஒப்பாரி வைக்கிறார்கள்.  சாமானியன்யான நமக்கு தோன்றுவது. எப்படி திரும்பினாலும் கால் வாயை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாத வகையில் இருக்கக்கூடிய கப்பல்களை மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று தோன்றவில்லையா? இவ்வளவு பெரிய கப்பல் திசை திரும்பி அப்படியே நின்று போனால் கால்வாயையே அடைத்துக்கொள்ளும். அப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்று இதுவரை யோசிக்கவே இல்லையா?

சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் முக்கியமானது கச்சா எண்ணெய்.. ஏற்றுமதி செய்கின்ற நாடுக்கு சரக்கு போகாவிட்டால் ஏகப்பட்ட நஷ்டம்.. இறக்குமதி செய்கின்ற நாடுகளுக்கு சரக்கு வராவிட்டால் பற்றாக்குறை ஏற்பட்டால் கடுமையான விலையேற்றத்தை சந்திக்க வேண்டியது வரும்.

உலக நாடுகளுக்கு இடையே எவனோ எவன் குடியையோ கெடுத்து பொருளாதார ரீதியான போர் தொடுக்க சரக்கு கப்பலை திட்டமிட்டு குறுக்காக நிற்கவைத்து விளையாட ஆரம்பித்துவிட்டான் என்று உலகம் முழுவதுமே பேசும் பொருளாக மாறி விட்டு உள்ளது.

ரஷ்யா, சிரியா, சைனா எனப் பல்வேறு நாடுகளுக்கு எதிராக சதி வேலை குற்றச்சாட்டுகள் டிசைன் டிசைனாக படிக்கப்படுகின்றன..தரை தட்டிவிட்ட சரக்கு கப்பலை மீட்க வேண்டும் என்றால் அதனை அசைப்பதற்கு முதற்கட்டமாக கப்பலின் எடையை குறைக்க வேண்டும். அதாவது கண்டைனர் களையும் எரிபொருளையும் வெளியேற்ற வேண்டும். இதையெல்லாம் செய்து முடிக்க குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது ஆகும்..

அது வரை வெட்டியாக எல்லா கப்பல்களும் அங்கேயே நிற்குமா/திட்டமிட்டு நிறுத்தி வைக்கப் படுமா அல்லது ஏழு நாட்கள் சுற்றிக் கொண்டு போய் சேரவேண்டிய இடத்துக்குப் போகுமா என்பதும் தெரியவில்லை.. சூயஸ் கால்வாய் விவகாரத்தில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு முதன்முதலாக எந்த நாடு ஐயோ அம்மா அலறப் போகிறதோ அப்போதுதான் எதிராளி யார் என்பதும் தெரியவரலாம்..

நாம்தான் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கிறோமே, விமானங்களையே ஆயுதங்களாக பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை தகர்த்ததுபோல்.. இயற்கையால் விபத்து என்ற பெயரில்..நமக்குத் தெரிந்த அளவுக்கு இப்படி மேம்போக்காகப் பார்க்கும்போதே இவ்வளவு சந்தேகங்கள்..!!!

ஏனெனில் எப்போதுமே உலகளாவிய வரலாறு,பொருளாதாரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டால், நல்லெண்ணத்தை விட சதித்திட்டங்கள்தான் அதிகமாக கும்மியடிக்கும்..

வெயிட் பண்ணி பார்ப்போம் மேலும் என்ன நடக்கிறது என்று..

ஏழுமலை வெங்கடேசன்

Related Posts

error: Content is protected !!