இந்திய மல்யுத்தசம்மேளன தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

இந்திய மல்யுத்தசம்மேளன தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!

ந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரம் குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி காவ்துறையினர தரப்பில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்திய தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத் சாக்சி மாலிக் சங்கீதா போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினர். இதனை அடுத்து தங்களது அரசு பணிகளில் அவர்கள் மீண்டும் இணைந்து இருந்தனர். இதனை அடுத்து அவர்களது போராட்டம் முடிவிற்கு வருகிறது என தகவல் பரவிய நிலையில் அதனை முழுமையாக மறுத்த வீரர் வீராங்கனைகள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய விளையட்டுத்துறை அமைச்சரான அணுராக் தாகூரை கடந்த வாரம் மல்யுத்த வீரர்கள் சந்தித்து பேசினர். ஒரு நாள் முழுவதும் நடந்த ஆலோசனைக்கு பிறகு, இந்த விவகாரத்தில் ஜூன் 15ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து தங்களது போராட்டத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வீரர் வீராங்கனைகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்கள் அளித்த பாலியல் புகார் குறித்த விவகாரத்தில் டெல்லி காவ்துறையினர தரப்பில் ரோஸ் அவண்யு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், “ஆபாசமாக சைகை செய்வது தொடர்பான ஐபிசி பிரிவு 354ஏ, ஒரு பெண்ணிற்கு விருப்பமில்லாமல் இருந்தும் அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்த போதும் தொடர்ந்து அந்த பெண்ணை பின் தொடர்வது தொடர்பான பிரிவு 354டி, ஒரு பெண்ணுடைய அடக்க வளர்ச்சிக்கு கேடு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வன்முறையில் தாக்குவது அல்லது தாக்க முயற்சிப்பது ஆகியவற்றை தொடர்புடைய ஐபிசி பிரிவு 354, கடுமையான காயத்தை உண்டாக்கக்கூடிய சட்டப்பிரிவு 506, குற்றம் செய்ய தூண்டுவது தொடர்பான பிரிவு 109 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1000 பக்கத்திற்கு பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து இதுதொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 22 ஆம் தேதி குற்றம் நடைபெற்று அதற்கான மூல காரணங்கள் உள்ளிட்டவை குறித்து டெல்லி நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

இதனிடையே, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மைனர் பெண் வீராங்கனை அளித்த புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அவரே திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார் என்றும் சேதி வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!