32°C
விளம்பரம்
Advertisement

Exclusive

ஜிஎஸ்எல்வி எஃப்-17:இந்தியாவின் புதிய ‘வானியல் கண்’ சாதனை! Exclusive

ஜிஎஸ்எல்வி எஃப்-17:இந்தியாவின் புதிய ‘வானியல் கண்’ சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது விண்வெளிப் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-17 (GSLV-F17) ராக்கெட் மூலம் அதிநவீன ‘இ.ஓ.எஸ்-05’ (EOS-05) பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அதற்குரிய புவிநிலை மாற்றுச் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி இந்திய விண்வெளி வரலாற்றில் ஜிஎஸ்எல்வி […]

September 4, 2026 admin
நியூயார்க் டைம்ஸ் vs ஓபன்ஏஐ:காப்பிரைட் போரில் ஏஐ-க் கு ஆதரவாக அமெரிக்கா! Exclusive

நியூயார்க் டைம்ஸ் vs ஓபன்ஏஐ:காப்பிரைட் போரில் ஏஐ-க் கு ஆதரவாக அமெரிக்கா!

செயலி என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள ‘நியூயார்க் டைம்ஸ் vs ஓபன்ஏஐ’ பதிப்புரிமை (Copyright) வழக்கில், டிரம்ப் நிர்வாகத்தின் நீதித்துறை (DOJ) அதிரடியாக நுழைந்துள்ளது. மில்லியன் கணக்கான செய்தித் தாள்களின் கட்டுரைகளை அனுமதி இன்றி எஐ பயிற்சிக்காகப் பயன்படுத்திய ஓபன்ஏஐ நிறுவனத்தின் நடவடிக்கை ‘நியாயமான பயன்பாடு’ (Fair Use) வரம்பிற்குள் தான் வருகிறது என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது அமெரிக்க அரசு. பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளுடன் ஒப்பிடும்போது, இதில் ஏற்படும் […]

September 3, 2026 admin
மருத்துவமனையா? மரண பொறியா? ஐசிஎம்ஆரின் பகீர் ரிப்போர்ட்! Exclusive

மருத்துவமனையா? மரண பொறியா? ஐசிஎம்ஆரின் பகீர் ரிப்போர்ட்!

மருத்துவமனைக்குச் செல்வது நோயைக் குணப்படுத்தத்தானே தவிர, புதிய நோயைச் சுமந்து வரவோ அல்லது உயிரை விட்டு வரவோ இல்லை. ஆனால், இந்திய மருத்துவமனைகளின் தற்போதைய நிலைமை அச்சமூட்டுவதாக மாறியிருக்கிறது. நாம் சாதாரணமாக நினைக்கும் கிருமிநாசினிகளுக்கும், வீரியமிக்க ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் அடங்காத ஆபத்தான பாக்டீரியாக்கள் நாட்டின் முன்னணி மருத்துவமனைகளிலேயே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நாட்டின் 20 முன்னணி மருத்துவமனைகளில், 1.59 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளிடம் நடத்திய பிரம்மாண்ட ஆய்வு, மருத்துவ உலகையே […]

September 3, 2026 admin
இந்திய விமானப்படையிலிருந்து அபினந்தன் ஓய்வு!-தனியார் விமான நிறுவனத்தில் பொறுப்பேற்பு! Exclusive

இந்திய விமானப்படையிலிருந்து அபினந்தன் ஓய்வு!-தனியார் விமான நிறுவனத்தில் பொறுப்பேற்பு!

2019-ஆம் ஆண்டு பாலாக்கோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்திய எல்லையைக் காத்த வீரர் குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான். இந்திய விமானப்படையில் தனது புகழ்பெற்ற சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ள இவர், தற்போது பிராந்திய விமான சேவை நிறுவனமான ‘ஃப்ளை91’ (Fly91) நிறுவனத்தில் இணைந்து தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். படைத்துறையில் இருந்து விலகி வர்த்தக ரீதியிலான விமானப் போக்குவரத்துத் துறைக்கு அவர் மாறியிருப்பது பாதுகாப்பு வட்டாரங்களிலும் […]

September 3, 2026 admin
காத்திருப்பு & கண்ணீர்:நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் சோகம்! Exclusive

காத்திருப்பு & கண்ணீர்:நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் சோகம்!

இயற்கைப் பேரிடர்கள் மனித குவாழ்வில் எப்போதும் மாறாத தழும்புகளை விட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கோரமான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கித் தங்களின் உறவினர்களை இழந்த குடும்பத்தினர் மருத்துவமனைகள் மற்றும் மீட்பு முகாம்களுக்கு வெளியே கடும் துயரத்துடன் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. உயிரோடு இல்லாவிட்டாலும் தங்களது அன்பானவர்களின் உடல்களையாவது முழுமையாக மீட்டு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு எதிர்பார்ப்புடன் அவர்கள் தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் தொடரும் […]

September 3, 2026 admin
கிராமப்புற வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்கள்:ஐபிபிஎஸ் (IBPS) அறிவிப்பு! Exclusive

கிராமப்புற வங்கிகளில் 13,706 காலிப்பணியிடங்கள்:ஐபிபிஎஸ் (IBPS) அறிவிப்பு!

கிராமப்புற வங்கிகள் அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks – RRBs) என்பவை இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயக் குடிமக்கள், சிறு குறு விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் கிராமப்புறத் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான கடன் மற்றும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரத்யேக நிதி நிறுவனங்களாகும். இந்த வங்கிகள் அனைத்தும் மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசு மற்றும் புரவலர் வணிக வங்கிகள் (Sponsor Banks) ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்புடன் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் […]

September 3, 2026 admin
முப்பது டாலரில் நிஜமாகும் சினிமா கனவு:  சீன ஸ்டுடியோவின் எளிய வாய்ப்பு! Exclusive

முப்பது டாலரில் நிஜமாகும் சினிமா கனவு: சீன ஸ்டுடியோவின் எளிய வாய்ப்பு!

சினிமா உலகில் கால் பதித்து, பிரம்மாண்டமான செட்களில் நடித்து, ஒரு முழு நீள வரலாற்றுப் படத்தில் அல்லது அதிரடி ஆக்ஷன் காவியத்தில் தானும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரமாக வலம் வர வேண்டும் என்பது பலகோடி சினிமா ரசிகர்களின் ஆழ்மனக் கனவாக இருந்து வருகிறது. இந்தத் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகள் பல்வேறு புதுமையான பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற திரைப்பட நகரம் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் […]

September 3, 2026 admin
அயோத்தி டிரஸ்ட்டின் புதிய நிர்வாகம்: ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா சி.இ.ஓ! Exclusive

அயோத்தி டிரஸ்ட்டின் புதிய நிர்வாகம்: ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா சி.இ.ஓ!

அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் அரங்கேறிய நன்கொடை முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து, டிரஸ்ட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முக்கிய அங்கமாக, ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அறக்கட்டளையின் புதிய நிர்வாகப் பொறுப்பாளர்களும் புதிதாக மூன்று அறங்காவலர்களும் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிர்வாகப் புனரமைப்பிற்கு வழிவகுத்த நன்கொடை விவகாரம் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் […]

September 2, 2026 admin
லைக்ஸ்கள் அல்ல; இனி கோடிகள்: தூள் கிளப்பும் இந்திய இன்ஃப்ளூயன்ஸர்கள்! Exclusive

லைக்ஸ்கள் அல்ல; இனி கோடிகள்: தூள் கிளப்பும் இந்திய இன்ஃப்ளூயன்ஸர்கள்!

சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தாக்காளர்கள் (Influencers), வெறும் விளம்பர முகங்களாக மட்டுமே இயங்கிய காலம் மெல்ல மாறி வருகிறது. இன்றைக்கு அவர்கள் தங்களுக்கெனத் தனித்துவமான நுகர்வோர் பிராண்டுகளை (Consumer Brands) உருவாக்கி, துணிகர மூலதன நிதியாளர்களின் (Venture Capitalists) கோடிக்கணக்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய வணிகப் அலையை இந்தியாவில் உருவாக்கியுள்ளனர். டிஜிட்டல் திரையில் பெற்ற செல்வாக்கை நேரடி வர்த்தகமாக மாற்றும் இந்த மாற்றம், இந்தியச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. விளம்பர மாதிரியிலிருந்து […]

September 2, 2026 admin
உலக தேங்காய் தினம்:பூஜ்ஜியக் கழிவுப் பொருளாதாரத்தின் புதிய புரட்சி! Exclusive

உலக தேங்காய் தினம்:பூஜ்ஜியக் கழிவுப் பொருளாதாரத்தின் புதிய புரட்சி!

இன்று செப்டம்பர் 2 -உலக தேங்காய் தினம்.இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய் (Coconut in tamil). கடவுளர்களுக்கு அர்ப்பணிப்பாகத் தரையில் போட்டு உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக்கொள்வதாக ஐதீகம். இந்து மதப் புராணங்களில் தென்னை மரம் ‘கற்பகவிருட்சம்’ எனச் சொல்லப் படுகிறது. கேட்டதைக் கொடுப்பது என்பது இதன் பொருள்.உலகின் பல்வேறு கலாச்சாரங்களாலும் போற்றப்படுவது தேங்காய். இந்தியாவில் புதிதாய் ஒன்றை வாங்கும்போது பூஜிக்கவும்… கோவில்களிலும், திருவிழாக்களிலும், ஹோமங்களிலும் அர்ப்பணிக்கவும் அனைவரும் பயன்படுத்துவது தேங்காயைத்தான். […]

September 2, 2026 admin
உடனடி செய்திகள்