32°C
விளம்பரம்
Advertisement

அலசல்

மலடாக மாற்றப்படும் விவசாய பூமிகள்! Running News

மலடாக மாற்றப்படும் விவசாய பூமிகள்!

தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் இன்று விவசாயம் செழிப்பாக நடைபெறவில்லை. மாறாக ரியல் எஸ்டேட் தொழில்தான் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு தந்த பூமி, இன்று மலடாக மாற்றப்பட்டு விட்டது. நகர்ப்புற விரிவாக்கமும், ரியல் எஸ்டேட் பெருக்கமும் ஊரில் இருந்த குளங்களையும், ஏரிகளையும், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் சிறு சிறு கால்வாய்களையும் தூர்ந்து போகச் செய்துவிட்டன. நகர்ப்புறங்களை விரிவாக்குவதால் நாடு விரிவடைவதாக நவீனப் பொருளாதார மேதைகள் சொல்கின்றனர்.உணவு தரும் நிலங்களை அழித்தோமானால் […]

October 11, 2013 admin
வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்! Running News

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!

உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம். அதன்பின் வெளியான் “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு […]

October 10, 2013 admin
ஏழைகள்தான்  90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட் Running News

ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்

நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது. இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை […]

October 9, 2013 admin
தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது! Running News

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!

பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!” என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள். ஆனால் விஞ்ஞானிகள் “”உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!” என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால் தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது. பூமியும் இருக்காது. நாமும் இருக்க மாட்டோம். தூசி அவ்வளவு மகத்துவமும் மகாத்மியமும் கொண்டது. தூசு என்பதில் முக்கால்வாசி } மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் […]

October 8, 2013 admin
குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!. Running News

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.

பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து “உடையும் செய்தி’யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் […]

October 6, 2013 admin
சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்! Running News

சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்!

நேற்று தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்ந்தேடுப்புக்கான தேதியையும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குள் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டதை, தொலைக் காட்ட்சிகளின் விவாத மேடைகள் மூலம் தெரிந்தது.. மற்ற நேரங்களில் நடக்கும் தேர்தல் காட்சியை விட இந்த தேர்தல் சற்று விறுவிறுப்பானது. காரணம், இந்தத் தேர்தல் மே மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன் மாதிரி வடிவமாக இருக்கும். இந்தத் தேர்தலில் வெற்றி […]

October 5, 2013 admin
காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ? அலசல்

காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ?

“”அவர்கள் காலணிகளை அணிந்து நீ நடந்து பார்” என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கிளேர் லூரூ டூபே கூறுவார். “அப்படி என்றால் என்ன? “உன்னிடம் வந்து நியாயம் கேட்பவரின் கூற்றை நீ உன் அனுபவங்களை வைத்து அணுகாதே, அவருடைய அனுபவம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்; அப்பொழுதுதான் நல்ல முறையில் தீர்ப்பளிக்க முடியும்’ என்று பொருள். இந்த அணுகுமுறையை நாம் அனைவரும் நம் சமூகப் பரிமாற்றங்களில் கடைபிடித்தால் மனித நேயம் தழைக்கும். பிரெஞ்சு […]

October 4, 2013 admin
அனுபவமே நல்ல ஆசான்!. அலசல்

அனுபவமே நல்ல ஆசான்!.

இக்காலத்திற்கு படிப்பறிவை விட பட்டறிவே அனைவருக்கும் தேவையாக இருக்கிறது. பட்டறிவால் பாதித்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் தங்களைத் திருத்திக் கொள்கிறார்கள்.சிலர் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் தாங்கள் கற்ற நன்மைகளையும், தீமைகளையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க தவறுவதால் அனுபவமற்றவர்கள் தவறுகளை செய்கிறார்கள். அனுபவமே நல்ல ஆசான். நாளுக்கு நாள், நாம் வளர வளர நாம் பெறும் அனுபவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. குழந்தைப் பருவம் முதல் இறப்பு […]

October 3, 2013 admin
மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்! அலசல்

மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!

தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, […]

October 2, 2013 admin
இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட் அலசல்

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது […]

October 1, 2013 admin
உடனடி செய்திகள்