சினிமா செய்திகள்
மோடி பிரதமர் ஆக ரஜினிகாந்த் சப்போர்ட் பண்ணனும்! – பி ஜே பி ஒப்பன் டாக்!
நாட்டில் நல்லாட்சி மலர திறமையான நரேந்திர மோடி பிரதமராக நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், “விலைவாசி உயர்வு, தீவிரவாதம் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற மக்கள் ஆவேசத்துடன் இருக்கிறார்கள்.நாட்டை ஆளும் தகுதியும், திறமையும் படைத்த நரேந்திர மோடி மக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராவது உறுதியாகிவிட்டது. தமிழ்நாட்டிலும் இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கணிசமான ஆதரவு கிடைக்கும். […]