பட்ஜெட் கூட்டத் தொடர் பராக் ; வருமான வரி விலக்கு உயரும்?

பட்ஜெட் கூட்டத் தொடர் பராக் ; வருமான வரி விலக்கு உயரும்?

இன்னும் மூன்றே மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளைத் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது நிதிமந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்க செய்ய உள்ளார். பாஜக அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும், தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதாலும், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மையில் நட்ந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு, முத்தலாக் மசோதா, குடியுரிமை சட்ட திருத்த மசோதா போன்றவற்றால் பாராளுமன்ற அவைகள் கூச்சல் குழப்பத்துடன் முடிந்த நிலையில், நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை வரும் 13-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 11 மணிக்கு உரை யாற்றுகிறார்.

மோடிக்கு எதிராக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் திரண்டு ஓரணியாக செயல்பட பெரும் முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், தற்போது தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜகவுக்கும் இது முக்கியமான பட்ஜெட். எனவே, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக வருமான வரி வரம்பு நான்கில் இருந்து ஐந்து லட்சம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. . அத்துடன் அரசின் கொள்கை ரீதியான முடிவெடுக்க வாய்ப்புள்ளதால், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!