ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்- விமர்சனம்!

ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்- விமர்சனம்!

ப் படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங், கதை எழுதி டைரக்ட பண்ணி இருக்கிறார். ஒரு சாதாரண கதையை எப்படி எல்லாம் குழப்பி சொல்ல முடியுமோ அப்படி எல்லாம் சொல்லியிருப்பவர், முழு படத்தையும் ஏதோ விளையாட்டாகவே இயக்கியிருக்கிறார். அதாவது காட்சிகள் தொடர்பில்லாமல் ஜம்ப் ஆவது குழப்புகிறது .திரைக்கதை எடிட்டிங் விஷயத்தில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் வித்தியாசமான கதையாக மாற்றியிருக்கலாம்.

அதாவது சிங்கப்பூரில் டாக்டர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் தீவிரம் காட்டி வருகிறார். மறுபக்கம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார். அதன்படி, ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்கிறார்.

அதன்படி, இருவரும் வெவ்வேறு வீடுகளுக்குள் நுழைய, இருவரில் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்பதும் தொடர் கொலைகளை செய்து வரும் கொலையாளி பிடிபட்டாரா? இல்லையா? என்பதும் தான் படத்தின் கதை என்று நினைத்து பார்த்தால், இறுதியில் அத்தனையும் வெறும் மாயை, என்ற ரீதியில் ஒரு விஷயத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்

சைக்கோ கொலைகாரனாக இயக்குனர் ஜோ ஜியோ வன்னி சிங் நடித்திருக்கிறார்.நிஜமாகவே இவரை ஒரு இயக்குனர் படம் தயாரிக்க இழுத்துவிட்டு பிறகு பாதியிலேயே ஜூட் விட்ட கோபத்தில் இப்படத்தை ஜோ இயக்கி நடித்திருக்கிறார். தனது கோபத்தை படத்திலேயே பல காட்சிகளில் வெளிப்படுத்தி யிருக்கிறார் ஜோ. ஆனால் ரசிகர்களை பற்றி அக்கறையே இல்லாமல் ஒரு குறும்படத்துக்கான சாத்தியத்தில் உள்ள சப்ஜெக்டை ஒருமுழு நீளபடமாக எடுத்து நோகடித்து அனுப்புகிறார்கள்.

சின்னத் திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வரும் ரியோ ராஜ், இதுபோன்ற சைக்கோ வேடத்தில் நடித்து இருப்பது புது சு என்றாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். போலீஸ் ஆபீசராக நடித்திருக்கும் ஜெய்னீஷ், கம்பீரமாக இருந்தாலும், அவருடைய நடிப்பும், வசனங்களும் சிரிக்க வைக்கிறது. நாயகியாக வரும் நபிஷா ஜுலாலுதீன் அக்கா வேடத்திற்கு பக்காவாக இருக்கிறார். அக்காவாக நடித்தாலும், டூயட், தனி பாடல்கள் என்று திரை முழுவதும் நிரம்பி வழிகிறார். சைக்கோவாக நடித்திருக்கும் குணாலன், வேடத்திற்கு ஏற்ற வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கேமராமேன் சலீம் பிலால் ஜித்தேஷ்ஷூம் பெயில் மார்க் வாங்கி விடுகிறார். ஆனால் இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை ரகத்தில் சேர்ந்து தப்பித்து விடுகிறார்.

மொத்தத்தில் பொருத்தமான தலைப்புடன் வந்த படம் ரசிகர்களை கையெடுத்து கும்பிட வைத்து விட்டது.

மார்க் 1.50/5

Related Posts