வாலிப, வயோதிக சங்கிகளுக்கு… மக்கள் தொகை குறித்து உங்களுக்கு அவ்வளவு அச்சமா?

வாலிப, வயோதிக சங்கிகளுக்கு… மக்கள் தொகை குறித்து உங்களுக்கு அவ்வளவு அச்சமா?

‘முஸ்லிம் டெலிவரி பையன்கள் சாப்பாட்டில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்தால் என்ன செய்வது?’ என்று சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் பேசிய வக்கிரம் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்துக்களை விட முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருகி, நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்றி விடுவார்கள் என்கிற அறிவியல் ஆதாரமற்ற ஒரு பொய்யை சங்கப் பரிவாரத்தின் தலை முதல் வால் வரை பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதன் ஒரு பகுதிதான் உமா கக்கியிருக்கும் விஷம்.

ஏற்கெனவே கோயம்புத்தூரில் பிரியாணியில் கருத்தடை மருந்தைக் கலக்கிறார்கள் என்பது விஷமத்தனமான, போட்டோஷாப் செய்யப்பட்ட சங்கிப் பொய் மூட்டை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் பெண்கள் கருவுறும் விகிதம் (fertility rate) கடந்த ஐம்பது ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்து 2.1 என்கிற அளவை நெருங்கி விட்டது. அதாவது சராசரியாக ஒரு பெண், தன் இனப் பெருக்கக் காலத்தில் இரண்டு குழந்தைகளை மட்டும்தான் பெறுகிறார். கருவுறு விகிதத்தில் இந்து மற்றும் முஸ்லிம் பெண்களுக்குடையே இருந்த இடைவெளியும் கூட தற்போது 1 புள்ளிக்கும் குறைவாகத்தான் இருக்கிறது.

2.1 என்கிற விகிதம் இருந்தால் மக்கள் தொகை வளர்ச்சி இரு தலைமுறைகளுக்கிடையே சமச் சீரான அளவில் இருக்கும். அதற்கும் குறைந்தால் மக்கள் தொகை குறைந்து பல புதிய பிரச்சனைகள் தோன்றும். ஜப்பான் போன்ற நாடுகளின் நிலை இதுதான்.

கருவுறும் விகிதம் பொருளாதார வசதி மற்றும் கல்வியறிவு குறைந்த பிரிவினரிடம்தான் அதிகம். இதில் மத வேறுபாடு என்பதெல்லாம் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதி மன்றத்தில் நடக்கும் ஒரு பொது நல வழக்கில் சங்கிகளின் பிடியில் இருக்கும் ஒன்றிய அரசு இந்தியாவில் பெண்கள் கருவுறும் விகிதம் ஆரோக்கியமான 2.1 என்கிற அளவில் இருப்பதாக ஒரு மனுவில் கூறி இருக்கிறது. ஆனாலும் பொது வெளியில் சங்கிகள் கொஞ்சமும் கூச்சமின்றிப் பொய் பேசி வருகிறார்கள்.

வாலிப, வயோதிக சங்கிகளுக்கு… மக்கள் தொகை குறித்து உங்களுக்கு அவ்வளவு அச்சம் இருந்தால் சிட்டுக்குருவி லேகியம், வயாகரா, நயாகரா என ஏதாவது ஒன்றைப் பிரசாதத்தில் கலந்து சாப்பிட்டு வர நாளடைவில் உங்கள் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு கிடைக்கலாம்.

விஜய்சங்கர் ராமசந்திரன்

error: Content is protected !!