பர்த் மார்க் – விமர்சனம்

பர்த் மார்க் – விமர்சனம்

ர்த் மார்க் என்ற டைட்டில் கொண்ட இப்படத்தை பார்ப்பதற்குமுன் ஏதாவது ஒரு விமர்சனத்தை படித்து விட்டு சென்றால் மட்டுமே இப் படத்தின் கதை, திரைக்கதையஒ புரிந்து கொள்ள முடியும் . இல்லாவிட்டால் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான். அதே சமயம் வழமையான சினிமா ரசிகனுக்கு யாதொரு பாதிப்பையும் ஏற்படுத்தாத இப் படம் கலை விமர்சகர்களிடம் வேண்டுமானால் ஓரளவு பாராட்டுகளைப் பெற்றுத் தரக் கூடும்.

அதாவது 1999 களில் நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் பங்கு பற்றிய இந்திய ராணுவ அதிகாரிகள் சிலருக்கு Post War Trauma எனும் தற்காலிக மன அதிர்ச்சி பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பில் உள்ள நாயகன் தன் மனைவி மீது அன்பு செலுத்துகிறான். ஆனால் அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள். அவளது பிரசவத்தை வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, இயற்கையான முறையில் பிரசவத்தை நிகழ்த்தும் தனியார் இயற்கை மருத்துவ கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவர் தன்னுடைய மன அதிர்ச்சிக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே.., தன் மனைவியை கவனித்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன் மனைவியின் வயிற்றில் வளரும் கரு தன்னுடையதா..! என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது.. அதை அறிந்து மிர்ணா அதிர்ச்சி அடைகிறார் . மேலும் இந்த குழந்தைக்கு பதிலாக நாம் வேறு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சபீர் கூற பயந்து நடுங்குகிறார் மிர்ணா. எங்கே தன் வயிற்ரில் வளரும் குழந்தையை கொன்று விடுவாரோ என்ற பயத்தில் சபீரை குடிசையில் வைத்து பூட்டிவிட்டு தீ மூட்டிவிட்டு தப்பி செல்கிறார். அங்கிருந்து தப்பும் சபீர் மிர்ணாவை துரத்துகிறார். மிர்ணாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதே நேரத்தில் அவரை சபீர் தாவி பிடிக்கிறார். அடுத்து நடந்தது என்ன? சபீர் மிர்ணாவை என்ன செய்தார், மிர்ணாவுக்கு குழந்தை பிறந்ததா? அதை சபீர் என்ன செய்கிறார் என்ற பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதுதான் இப்படத்தின் கதை.

படம் முழுவதும் திட்டமிட்டு கதாபாத்திரங்களை திரையில் காட்சி படுத்தாமல்.. அவர்களின் இயல்புக்கு ஏற்ப காட்சிப்படுத்தியிருப்பது புதிது. அதேபோல் சில கதாபாத்திரங்களை ரசிகர்களின் கோணத்தில் யூகிக்க விட்டிருப்பதும் புதிது. குறிப்பாக செபாஸ்டின் எனும் கதாபாத்திரத்தை குறிப்பிடலாம். ஷபீர்- கதையின் நாயகனான டேனியல் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.கர்ப்பிணியாக வரும் மிர்ணாவை தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை கர்ப்பிணியாகவே வாழ்ந்து முடிக்கிறார். இயற்கை பிரசவம் நடப்பதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் இயற்கை வைத்தியங்கள் ஒரு பக்கம் இது நல்லது தானே என்று தோன்றினாலும் மிர்ணா ஒரு கர்ப்பிணி பெண்ணின் வலியையும் வேதனையையும் தத்ரூபமாக கண்முன் நிகழ்த்தி காட்டி அசத்தியிருக்கிறார். கூடவே தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர்.வரலட்சுமி நடித்திருக்கின்றனர்.

மாறுபட்ட இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். கேமராமேன் உதய் தங்கவேல் ஒளிப்பதிவு  பளபளகிறது

உளவியல் ரீதியான படங்களின் வரவு தமிழில் அரிதாகத்தான் நடந்து வரும் சூழலில் .விக்ரம் ஶ்ரீதரன் இயக்கி இருக்கும் இப்படம் கொஞ்சம் கடினமான புரிதலை ஏற்படுத்துகிறது. படத்தில் தொடக்கம் முதல் கடைசி வரை ரிலாக்ஸ் என்பதற்கு இடம் எதுவும் இல்லாமல் கொண்டு சென்று பாமர ரசிகர்களைச் சென்று சேர விடாமல் செய்து விட்டது.

மொத்தத்தில் பர்த் மார்க் – இன்குபேட்டர்

மார்க் 2.5/5.

error: Content is protected !!