பிகானர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து! – வீடியோ!

பிகானர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸ்  தடம் புரண்டு விபத்து! – வீடியோ!

ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியது.

கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் இன்று மாலை 5 மணி அளவில் மேற்கு வங்கத்தின் தோமோஹானி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் சுமார் 4 பெட்டிகள் தடம் புறண்டுள்ளன. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, விபத்து குறித்த வெளியாகியுள்ள வீடியோக்கள், புகைப்படங்கள் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சேதமடைந்த ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர். சம்பவ இடத்தில் போலீசாருடன் உள்ளூர் மக்களும், பிற பயணிகளும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மீட்பு ரயில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காயமடைந்தவர்கள் மைனகுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் ஜல்பாய்குரி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பல பயணிகள் தடம் புரண்ட ரயிலுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேஸ்கட்டர்கள் வைத்து ரயில் பெட்டிகள் வெட்டி திறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!