ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பாரட்டில் மகிழ்ந்த “அசுரகுரு” டீம்!

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பாரட்டில் மகிழ்ந்த “அசுரகுரு” டீம்!

JSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்து இருக்கும் படம் “அசுரகுரு”. விக்ரம் பிரபு அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு, நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து படத்தை பற்றி அதன் டைரக்டர் ஏ.ராஜ்தீப் கூறியதாவது:-அசுர குரு, அதிரடி சண்டை காட்சி கள் நிறைந்த ‘திரில்லர்’ படம். கதாநாயகன் விக்ரம் பிரபு, கொரியர் ஆபீசில் வேலை செய்கிறார். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது, அசுரத்தனமான சுபாவம்.

அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு இருக்கிறது. அது, சமூகத்தில் நடக்கும் குற்றங் களை பார்த்து ஆக்ரோஷம் அடைகிறது. அது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? என்பதை திகில் பட பாணியில் சொல்லி இருக்கிறோம்.கதாநாயகி மகிமா நம்பியார், துப்பறியும் அலுவலகத்தில் வேலை செய்யும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வருகிறார். ஒரு குற்றம் காரணமாக விக்ரம் பிரபுவை தேடுகிறார். அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா, இல்லையா? என்பது கதை” என்று தெரிவித்து இருந்தார்

இதனிடையே அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார். அசுரகுரு படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்சியில் உள்ளனர்.

சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள “அசுரகுரு” விரைவில் திரைக்கு வரவுள்ளது

இயக்கம் – ஏ. ராஜ்தீப்
இசை – கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவு – விசாரணை ராமலிங்கம்
வசனம் – கபிலன் வைரமுத்து, சந்துரு மாணிக்கவாசகம்
பாடல்கள் – கபிலன் வைரமுத்து, பழநிபாரதி

error: Content is protected !!